அவ்வப்போது இணையத்தில், சில சேவைத் தளங்கள் மிகப் பிரமாதமாக, புதிய கோணங்களில் மக்களுக்கு வசதிகளைத் தருவதற்காகத் தொடங்கப்படும். பல மக்களிடையே பிரபலமாகி வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கும். சில தளங்கள், தொடர்ந்து ஆதரவு இல்லாத நிலையில் முடங்கிப் போகும். அது போல 2010 ஆம் ஆண்டில் இயக்கத்தை நிறுத்திய சில தளங்களை இங்கு காணலாம். இந்த தளங்களில் சில அவற்றின் பெயரைக் கேட்டவுடனேயே உங்கள் மனதில் அவை என்ன மாதிரியான சேவைக்குத் தொடங்கப்பட்டன என்று தெரிய வரும். சில தளங்கள் ஆரம்பிக்கப்பட்டனவா என்ற கேள்வியை உங்கள் மனதில் தோற்றுவிக்கும். இங்கு தரப்பட்டுள்ள தளங்கள் குறித்து எண்ணிப் பாருங்கள்.
1. கூகுள் வேவ் மற்றும் பஸ்: 2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கூகுள் நிறுவனம் வேவ் (Wave) என்று ஒரு சேவையைத் தொடங்கியது. இந்த தளம் இமெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் அல்லது வேர்ட் ப்ராசசர் என எந்த வகைக்கும் உள்ளாக வரவில்லை. ஆனால் இந்த வசதிகள் அனைத்தும் திணிக்கப்பட்ட ஒரு ஸ்வீட் கொழுக்கட்டையாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இதனைப் பயன்படுத்தியவர்கள், இதன் செயல் தன்மை புரிபடாமல் தலையைப் பிய்த்துக் கொண்டனர். அடுத்து ஒரு ஆண்டுக்குப் பின் கூகுள் பஸ் (Buzz) என்று இன்னொரு வசதியைத் தொடங்கியது. இது ஜிமெயிலின் இணைந்த பகுதியாய் ஆக்கப்பட்டது. பின்னர் இது நீக்கப்பட்டது. கூகுள் அமைத்த வேவ் இன்னும் மூடப்படவில்லை. இதனை நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி இருந்தால், இப்போதும் சென்று பழைய தகவல்களைப் பெறலாம். ஆனால் ஆதத்த் வசதி எடுக்கப்பட்டது.
2. கூல் (Cuil) இணைய தேடுதளம்: இந்த கூல் தளம் குறித்து கம்ப்யூட்டர் மலரில் பெரிதாக எழுதி இருந்தோம். இந்த தளத்தை அமைத்தவர்களும், உலகையே மாற்றும் தேடுதல் தளம் என்று இதனை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் எதனையும் மாற்றவில்லை. இந்த தளம் அறிமுகப்படுத்தப்பட்டபோது பலர் இந்த தளத்தை முற்றுகை இட்டதால், அதன் சர்வர் திணறியது. அப்போது இந்த தேடுதல் தளம் தானாக மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தவறுதலான முடிவுகளைத் தரத் தொடங்கியது. அறிமுகத்திற்கு முன்னால், இது குறித்து கூல் தளத்தை அமைத்தவர்கள் பல விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தனர். 12,000 கோடி இணைய தளங்கள் இதனுடன் இணைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. கூகுள் 4,000 தளங்களைத்தான் இன்டெக்ஸ் செய்து வைத்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் கூல் தேடுதளம், தளங்களின் பொருள் அடிப்படையில் வரிசைப்படுத்துவதாக அறிவித்தது. கூடுதலாக சார்ந்த தளங்களின் பட்டியலையும் தருவதாகக் கூறியது. ஆனால் எந்த அறிவிப்பும் இன்றி ஒருநாள் கூல் தேடுதல் தளம் மூடப்பட்டது.
3. பேஸ் புக் லைட் (Facebook Lite): 2009 ஆம் ஆண்டு செப்டம்பரில் பேஸ்புக் தளத்தின் சிறிய அளவிலான சுருக்குத் தளமாக பேஸ்புக் லைட் அறிமுகமானது. இதன் மூலம் வேகம் குறைந்து செயல்படும் இணைய இணைப்பில், வேகமாக பேஸ்புக் தளத்தைக் கையாள முடியும் என பேஸ்புக் திட்டமிட்டது. lite.facebook.com என்ற தளம் உருவாக்கப்பட்டது. இந்த தளம் சென்றவர்கள், இதில் விளம்பரங்கள் மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால், இந்த சேவையும் தளமும் அடுத்த சில மாதங்களிலேயே எந்தவித அறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டது.
4. விண்டோஸ் லைவ் ஸ்பேஸ்: கூகுள் நிறுவனத்தின் வேவ் போல, மைக்ரோசாப்ட் வழங்கிய லைவ் ஸ்பேஸ் வசதியும் இன்னும் மூடப்படவில்லை. ஆனால், அடுத்த மாதம் முதல் இந்த தளத்தில் உள்ள செய்திகளைப் பார்க்கலாம்; புதியதாக எதனையும் இணைக்க முடியாது. இதற்குப் பதிலாக, மைக்ரோசாப்ட் வேர்ட் ப்ரெஸ் தளத்திற்குத் தன் பதிவாளர்களை மாற்றிக் கொள்ளச் செய்தது. மேலே காட்டப்பட்டுள்ள தளங்களைப் போல, பல இணைய சேவைத் தளங்கள் 2010 ஆம் ஆண்டில் மூடப்பட்டன. ஆனால் அவை மக்களிடம் அவ்வளவாகப் பிரபலமாகத தளங்கள் என்பதால், இங்கு குறிப்பிடப்படவில்லை.
செவ்வாய், 28 டிசம்பர், 2010
2010ல் முடங்கிப் போன சேவை தளங்கள்
பிரிவு:
இணையத்தில் படித்தவை
ஆசியாவின் மிகப்பெரிய "டூல்ரூம்'
புனேயில் உள்ள டாடா மோட்டார்ஸ் தொழிற் சாலையில், "ஆசியாவின் மிகப்பெரிய டூல்ரூம்' உள்ளது. ஒவ்வொரு இடத்திலும் செய்யப்படும் உபகரணங்களை, ஒரு இடத்திற்கு கொண்டு வந்து "அசெம்பிளிங்' செய்ய அதிக காலமாகும். எனவே வெளிநாட்டில் இருந்து அனைத்து வகை இயந்திரங்களையும் இறக்குமதி செய்து கார், டிரக்கு களுக்குத் தேவையான அனைத்து உதிரிப்பாகங்கள், முக்கிய பாகங்களை உருவாக்கும் விதத்தில் இந்த "டூல்ரூம்' உள்ளது. டாடா மோட்டார்சில் சிறப்பு அனுமதி வாங்கினால், இந்த "டூல்ரூமை' பார்வையாளர்கள் பார்வையிட முடியும். 20 செகண்டுகளுக்கு ஒரு டிரக்கை உருவாக்கும் விதத்தில் இந்த "டூல்ரூம்' உள்ளது. புதிய நானோ காரும் இந்த "டூல்ரூமில்' தான் உருவாக்கப்பட்டது. பார்வையாளர்கள் பேட்டரி காரில் அமர்ந்து, இந்த டூல்ரூமைப் பார்வையிட முடியும். இறங்கி நடந்து சென்று பார்வையிட அனுமதி இல்லை. 60 வகையான வண்டிகள் இந்த "டூல்ரூமில்' உருவாக்கப்படுகின்றன. ரோபோக்கள் இந்த "டூல்ரூமில்' பணிபுரிகின்றன.
பிரிவு:
புதிய தொழில்நுட்பங்கள்
2010ல் இணையம்
இணையப் பயன்பாட்டில், இந்தியா 2010 ஆம் ஆண்டில் மிகப் பெரிய அளவில் வளர்ந்து இருந்தது. இந்திய இன்டர்நெட் மற்றும் மொபைல் பயனாளர் அமைப்பு வெளியிட்ட தகவல்களின்படி, ஏறத்தாழ 6 கோடி பேர் இணையத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளனர். 74 லட்சம் பிராட்பேண்ட் இணைப்பு பயன்படுத்தி வந்தனர். இந்த ஆண்டின் பெரும்பாலான வளர்ச்சி கிராமப் புறங்களிலேயே இருந்தது. இந்த வேகத்தில் சென்றால், 2030 ஆம் ஆண்டில் இந்தியாவின் அனைத்து பகுதிகளும் வயர்லெஸ் இணைப்பில் இருக்கும் என்று பல அமைப்புகள் தெரிவித்துள்ளன. சரி, இந்தியர்கள் இணையத்தில் எதனை விரும்பிப் பார்த்தனர்? கூகுள் வெளியிட்ட தகவல் தொகுப்பின்படி, அதிகம் தேடப்பட்டவை பாடல்களே. அடுத்ததாக பேஸ்புக், கூகுள் மற்றும் யு-ட்யூப் தளங்களே. இருப்பினும் இந்த பட்டியலில் முதல் இடத்தை வழக்கம்போல பிடித்திருப்பது இந்திய ரயில்வே டிக்கட் முன்பதிவு செய்திடும் தளமே. இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் நடந்தேறிய அரசியல் பரபரப்புகள் பல இணையம் வழியாகவே மக்களுக்குத் தெரிய வந்தன. குறிப்பாக ராடியா டேப் உரையாடல்கள் பல யு-ட்யூப் தளங்களில் பதியப்பட்டு கேட்கப்பட்டன. இந்த ஆண்டு தொடக்கத்தில் சீன அரசுக்கும் கூகுள் நிறுவனத்திற்கும் இணையம் தொடர்பாக பெரும் சச்சரவு ஏற்பட்டது. கூகுள் தான் ஒத்துக் கொண்ட ஒப்பந்த வரையறைகளை மீறி விட்டதாக அறிவித்தது. இதனால், தன் சீன தளத்திற்கு வந்தவர்களை, தன்னுடைய ஹாங்காங் தளத்திற்கு கூகுள் திருப்பிவிட, இதனைத் தான் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சீன அரசு அறிவித்தது. இதனால், இந்தியா, ஜெர்மனி மற்றும் அமெரிக்க இணைய தளங்கள் சீனர்களால் கைப்பற்றப்பட்டன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது விக்கிலீக்ஸ், சீன இணைய தேடுதளம் பைடு, இதற்கு ஒத்துழைத்ததாக விக்கிலீக்ஸின் தற்போதைய செய்தி அறிவிக்கிறது. பொதுவாக அமைதியாக இருக்கும் கூகுள் நிறுவனம், தன்னுடைய சீன செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளப்போவதாக மிரட்டியது. அதனை ஒரு அளவில் மேற்கொள்ளவும் செய்தது. இன்னும் சீனாவிற்கும் கூகுள் நிறுவனத்திற்கும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. வரும் ஆண்டு நிச்சயம் இணையத்திற்கு ஓர் உறுதியான வளர்ச்சியைத் தரும் என எதிர்பார்க்கலாம். இதன் மூலம் வர்த்தகம் வளர்ந்து மக்கள் வாழ்க்கை வளம் பெறும் என்றும் எதிர்பார்க்கலாம்.
பிரிவு:
இணையத்தில் படித்தவை
சனி, 4 டிசம்பர், 2010
விண்வெளியை சுத்தம் செய்ய 9,000 கோடி
பிரிவு:
நாட்டு நடப்புகள்
10 கோடி ஆண்டு பழைய முதலை படிமங்கள் மீட்பு
பாங்காக்: 10 கோடி ஆண்டு பழமையான முதலைகளின் எலும்புக் கூடுகள் தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் மகாசரகம் பல்கலைக்கழக அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் குழு கோம்சான் லாப்ரசர்ட் தலைமையில் சமீபத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தினர். இதில் சுமார் 10 கோடி ஆண்டு பழமையான ஏராளமான முதலைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த முதலைகளுக்கும் தற்போதைய முதலைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். முதலை படிமங்களின் பல் அமைப்பை கொண்டு முதல்கட்டமாக நடைபெற்ற ஆராய்ச்சியில் அவை மீன்களை மட்டுமே உணவாகக் கொண்டு வாழ்ந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
பழங்கால முதலைகள் தரையில் வாழ்ந்திருக்க வேண்டும். மிக விரைவாக ஓடும் திறன் பெற்றிருந்திருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இது பற்றி தொடர் ஆராய்ச்சி நடந்து வருகிறது.
பிரிவு:
வரலாற்றுச் சிறப்புகள்
பிழைத்தது ஜீவநதி
தாமிரபரணி நதியில் மணல் அள்ளுவதற்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் மீதமிருக்கும் ஒரே ஜீவ நதியான தாமிரபரணியை ஈவு இரக்கம் இல்லாமல் ஒழித்துக் கட்டும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க உயர் நீதிமன்றம் முன்வந்திருப்பதை இயற்கை ஆர்வலர்களும் அடுத்த தலைமுறைகள் மீது அக்கறை கொண்டவர்களும் மனதார வரவேற்கின்றனர். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
கட்டுமான வேலைகளுக்கு கணிசமான மணல் தேவைப்படுகிறது. ஆற்றுப் படுகைகளில் அரசு குறிப்பிடும் இடங்களில் மணல் அள்ளி விற்பதன் மூலம் அந்த தேவை நிறைவேற்றப்பட்டது. பொருளாதார வளர்ச்சியால் எட்டுத் திசையிலும் பிரமாண்ட கட்டிடங்கள் எழத் தொடங்கியதில் இருந்து ஆறுகளில் மணல் அள்ளுவது பணம் அள்ளுவதற்கு சமமாக பெருந்தொழிலாக உருவெடுத்தது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அதே நதிகள், அதே மணல் வளம் இருந்துவரும் நிலையில் திடீரென தேவை எகிறினால் என்ன ஆகும்? வலிமை மிகுந்தவர்கள் தனி வழி வகுத்தார்கள். பொறுப்பான அரசுகள் கொண்டுவந்த அனைத்து கட்டுப்பாடுகளும் பகிரங்கமாக மீறப்பட்டன.
‘மணல் கொள்ளை’ என்ற பிரயோகம் குழந்தைகளும் புரிந்துகொள்ளும் அளவுக்கு புழக்கத்தில் வந்தது. திருட்டு மணலுடன் இருட்டில் செல்லும் லாரிகளை தடுக்க முயன்ற நேர்மையான அதிகாரிகள் வாகனங்களால் மோதி கொல்லப்பட்ட சம்பவங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணர்த்தின. எந்திரங்களை பயன்படுத்தி எந்த இடத்தில் வேண்டுமானாலும் சகட்டு மேனிக்கு மணல் அள்ளியதால் நீண்ட நெடிய வரலாற்று பெருமை மிகுந்த நதிகள் மூளியாக்கப்பட்டு சீர்குலைந்தன. தாமிரபரணியை பொருத்தவரை குடிப்பதற்கும் குளிப்பதற்கும் பாசனத்துக்கும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரே நதி. ஒருங்கிணைந்த நெல்லைச் சீமையின் நதிக்கரை நாகரிக பாரம்பரியம் உலகப் புகழ் பெற்றது. பல ஆண்டுகள் தொடர்ந்த போராட்டத்தின் விளைவாக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தாமிரபரணியின் மறுபிறவிக்கு வழி வகுக்கும் என நம்பலாம்.

சச்சினுக்கு கிடைக்குமா லாரஸ் விருது
உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் லாரஸ் விருதை (2011) கைப்பற்றும் வாய்ப்பு, இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கிடைத்துள்ளது. விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்கும், வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டு தோறும் லாரஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டுக்கான (2011) இவ்விருதுகள் பிப்ரவரியில் வழங்கப்பட உள்ளன. இதற்கான விளையாட்டு வீரர்கள் பரிந்துரை பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் இந்த ஆண்டு கிரிக்கெட் அரங்கில் பல புதிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 200 ரன்கள் (எதிர்-தென் ஆப்ரிக்கா, குவாலியர்) எடுத்த முதல் வீரர், டெஸ்ட் அரங்கில் 14 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் (எதிர்-ஆஸ்திரேலியா, பெங்களூரு) உள்ளிட்ட உலக சாதனைகளை படைத்துள்ளார். இவருடன் இணைந்த மற்றொரு கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் பெயரும், லாரஸ் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இவர், இந்த ஆண்டு டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுகளை (எதிர்-இந்தியா, காலே) வீழ்த்திய உலகின் முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இவர்களுடன் டென்னிஸ் வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), "பார்முலா-1' சாம்பியன் செபாஸ்டியன் வெட்டெல் (ஜெர்மனி), கால்பந்து வீரர்களான டீகோ போர்லான் (உருகுவே), இனியஸ்டா (ஸ்பெயின்), லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), கோல்ப் வீரர் கிரீம் மெக்டவல் (அயர்லாந்து) உள்ளிட்டோர் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களிலிருந்து 6 பேர், லாரஸ் மீடியா தேர்வுக் குழுவினர் மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்படும். பின்னர் இந்த 6 பேரிலிருந்து ஒருவர், ரகசிய ஓட்டெடுப்பின் மூலம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரராக தேர்வு பெறுவர். விருது வழங்கும் நிகழ்ச்சி பிப். 7 ம் தேதி அபுதாபியில் நடக்க உள்ளது.
பிரிவு:
விளையாட்டுகள்
டேப்ளட் பிசி பயன்பாடு அதிகரிக்கும்
அமெரிக்காவில் இயங்கும் டிஜிடைம்ஸ் ரிசர்ச் நிறுவனம், அண்மையில் மேற்கொண்ட டிஜிட்டல் சாதனப் பயன்பாடு குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஆண்டு முதல் டேப்ளட் பிசிக்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்கும் என்று காட்டியுள்ளது. 2013 ஆம் ஆண்டில், 10 கோடி டேப்ளட் பிசிக்கள், மக்களுக்குத் தேவைப்படும் என அறிவித்துள்ளது. எதிர்காலம், மொபைல் இன்டர்நெட் இணைப்பில்தான் இயங்கும் என்று தெரிவித்துள்ள இந்த நிறுவனம், இதனால், ஸ்மார்ட் போன், டேப்ளட் பிசி மற்றும் நோட்புக் கம்ப்யூட்டர்கள் பரவலாக மக்களால் பயன்படுத்தப்படும் என்றும் கூறி உள்ளது. 2013ல் 80 கோடி ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்படும். இது இந்த ஆண்டைக் காட்டிலும் இரு மடங்கு கூடுதலாகும். இதனால், டேப்ளட் பிசிக்கள் பால் மக்கள் கவனம் திரும்பும். இருந்தாலும், ஸ்மார்ட் போன் அளவிற்கு டேப்ளட் பிசியின் பயன்பாடு அமைய சில காலம் ஆகும். 2013 வரை இதன் பயன்பாடு 12% முதல் 13% வரையில் மட்டுமே இருக்கும். அதன் பின்னரே, மிக அதிகமாக இது வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. இன்று வரை ஆப்பிள் நிறுவனத்தின் டேப்ளட் பிசியான, ஐ-பேட் தான் அதிகம் விற்பனையாகியுள்ளது. 42 லட்சம் ஐ-பேட் சாதனங்களை மக்கள் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இது ஆப்பிள் மட்டுமே, இந்தப் பிரிவில் சில காலம் இயங்கியதால் ஏற்பட்ட விற்பனை. தற்போது சாம்சங், எச்.பி. உட்பட பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் டேப்ளட் பிசி தயாரிப்பில் இறங்கியுள்ளன. இந்த வகையில் ஆர்.ஐ.எம். நிறுவனத்தின், பிளேபுக் டேப்ளட் பிசி, இச்சந்தையில் மிகப் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
பிரிவு:
புதிய தொழில்நுட்பங்கள்
வியாழன், 28 அக்டோபர், 2010
புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக்கும் கருஞ் சிவப்பு தக்காளியை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள், அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து ஆராய, புளோரா என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.
இந்த புளோரா திட்டத்தின் கீழ், ஐரோப்பிய மையங்கள் மற்றும் பிரிட்டனர், நார் விச்சில் உள்ள ஜான் இன் னஸ் மையம் இணைந்து, கருஞ்சிவப்பு தக்காளியை உருவாக்கி உள்ளனர். தோட்டத்தில் வளர்க்கப்படும் செடியின் இரண்டு வகை ஜீன்களை பிரித்தெடுத்து, கருஞ்சிவப்பு தக் காளி உருவாக்கப்பட்டுள்ளது.
“பி53′ என்ற ஜீனில் குறைபாடுகள் இருந்தால், புற்று நோய் மற்றும் இதய நோய் ஏற்படும். இந்த குறைபாடு உள்ள எலிகளிடம் பரிசோதித்ததில், கருஞ்சிவப்பு தக்காளி புற்று நோய் மற்றும் இதய நோய்களை எதிர்க்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறைபாடுகள் உள்ள எலிகள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டன. ஒரு பிரிவு எலிகளுக்கு சாதாரண உணவு அளிக்கப்பட்டது. இன்னொரு பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் சிவப்பு நிற தக்காளி பவுடர் உணவாக அளிக்கப்பட்டது. மூன்றாவது பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் கருஞ்சிவப்பு தக்காளி பவுடர் அளிக்கப்பட்டது.
சாதாரண மற்றும் சிவப்பு தக்காளி உணவு உட்கொண்டு வந்த எலிகளின் வாழ்நாள் 142 நாட் களில் முடிந்தது. ஆனால், கருஞ்சிவப்பு தக்காளியை உணவாக சாப்பிட்டு வந்த எலிகளின் வாழ்நாள் 182 நாட்களாக நீடித்தது. புற்று நோய் மற்றும் இதய நோய் தாக்கினாலும், கருஞ்சிவப்பு நிற தக் காளிகள் வாழ்நாளை அதிகரிக்கும் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எந்த விதமான காரணிகள், புற்று நோய் அல்லது இதய நோயை தடுக்கின்றன என்பது துல்லியமாக கண்டறியப் படவில்லை. கருஞ்சிவப்பு தக்காளியின் மருத்துவ, ரசாயன குணம் குறித்த அடுத்த கட்ட சோதனைக்கு விஞ் ஞானிகள் தயாராகி வருகின்றனர். மனிதர்களிடம் இதை பரிசோதிக்க நீண்ட காலம் பிடிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ குறிப்புகள்
'இன்னொரு பூமி' இருக்குமா?
இன்றுவரை 230 அயல்கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இதில் ஜெப்ரி மார்சி என்பவர் தலைமையிலான அமெரிக்க ஆராய்ச்சிக் குழு மட்டும் 150 கிரகங்களைக் கண்டுபிடித்திருக்கிறது. நமது பால்வீதியில் மட்டும் 10 ஆயிரம் கோடி கிரகங்கள் இருக்கலாம் என்று ஜெப்ரி மார்சி தெரிவித்திருக்கிறார். இதில் வியாழன் போன்ற வாயுக்கோள கிரகங்கள் 600 கோடி இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியைப் போன்று 10 லட்சம் கிரகங்கள் இருக்கலாம் என்று டெப்ராபிசர் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார். தற்போது 5 கிரகங்களில் பூமியைப் போன்று தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 கிரகங்களில் உயிரினம் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மெக்சிகோ அருகே விழுந்த ஒரு விண்கல்லில் சர்க்கரைப் படிவு காணப்பட்டிருப்பதால், உயிரினம் உள்ள அயல்கிரகம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அயல்கிரகங்களில் மனிதர்களைப் போன்ற அறிவுமிக்க உயிரினங்கள் இருக்கின்றனவா? என்று கண்டுபிடிப்பதற்கான திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தி வருகிறது. நமது பூமியின் கடலின் அடியில் உள்ள எரிமலைகளிலும், வடதுருவப் பனிப் பிரதேசத்திலும், வறண்ட பாலைவனங்களிலும் ண்ணுயிரிகள் இருப்பதைப் போல, விண்வெளியில் உள்ள அயல்கிரகங்களிலும் உயிரினங்கள் ஏற்கனவே தோன்றி வாழ்ந்து கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டெப்ராபிசர் தெரிவித்துள்ளார். பூமிக்கு அருகில் உள்ள அயல்கிரகங்களில் உயிரினங்கள் இருந்தால், அதை 10 வருடங்களுக்குள் கண்டுபிடித்துவிடலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
பூமியில் இருந்து 44 ஒளிவருட தூரத்தில் உள்ள `உர்சா மேஜர்’ என்ற நட்சத்திரத்தை ஒரு கிரகமானது, சூரியனை பூமி சுற்றிவரும் தூரத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அக்கிரகத்தில் தண்ணீரும், உயிரினங்களும் காணப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இரவில் நான் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப் பார்க்கும்போது அவற்றில் உயிரினங்கள் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது’ என்கிறார், டெப்ரா பிசர்.

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்
ஏலக்காய் என்பது இஞ்சி செடி வகையைச் சேர்ந்தது. பச்சை நிறக் காய்களைக் கொண்டது. ஏலக்காய் பச்சை நிறத்திலும், அடர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். ஏலக்காய் நறுமணப் பொருளாக மட்டும் இல்லாமல், பல மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும். மன இறுக்கத்தைக் குறைத்து உடல் புத்துணர்ச்சி பெற ஏலக்காய் பயன்படுகிறது. பல் மற்றும் வாய் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு ஏலக்காய் நல்ல தீர்வாக அமையும். செரிமானத்திற்கு உதவும். இதனால்தான் நெய் சேர்த்து செய்யப்படும் இனிப்புகளில் அவசியமாக ஏலக்காயை சேர்ப்பார்கள். குரல் வளை மற்றும் தோல் தொடர்பான நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு. மலட்டுத் தன்மையைப் போக்குவதற்கும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.
பிரிவு:
மருத்துவ குறிப்புகள்
சோழர் காலத்து தமிழ் எழுத்துக்கள் திருமலையில் கண்டெடுப்பு
திருமலை மாவட்டத்தில் சோழர் காலத்து தமிழ் எழுத்துக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருமலை மாவட்டத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தொன்மையான தமிழ் எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டுக்கள் நிலத்துக்கடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. பாடல் பெற்ற தலமான திருக்கோணஸ்வரம் கோவிலுக்கு அண்மையாக செல்லும் கோணேஸ்வரம் வீதிக்கு அண்மையாக இந்த கல்வெட்டுக்கள் மண்ணில் புதைந்து கிடக்கிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரிவு:
வரலாற்றுச் சிறப்புகள்
இரட்டை சூரியன் உள்ள கிரகங்கள் கண்டுபிடிப்பு
டாட்டூயின்’ என்பது அந்த உலகம். அங்கு 2 சூரியன்கள். இரண்டும் அவ்வப்போது வந்துபோகும். இது கதையில்லை. உண்மைதான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.பிரபஞ்சத்தில் ‘லைரா’ என்ற பகுதி பற்றி அமெரிக்காவின் டென்னசி பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.
அப்பகுதியில் நட்சத்திரங்கள் மற்றும் கோள்களில் ஏற்படும் மாற்றங்களை அதிநவீன தொலைநோக்கிகள் மூலம் தொடர்ச்சியாக கண்காணித்தனர். அப்பகுதியில் சுமார் 12 கிரகங்களுக்கு இரண்டிரண்டு சூரியன்கள் இருப்பது தெரியவந்துள்ளது.பூமியில் இருந்து இது சுமார் 49 ஒளிஆண்டு (49 லட்சம் கோடி கி.மீ.) தூரத்தில் இருக்கிறதாம். இப்போது புறப்பட்டு ஒளியின் வேகத்தில் ராக்கெட்டில் போனால்கூட 49 ஆண்டு கழித்துதான் அங்கு சென்றடைய முடியும்.. அவ்வளவு தொலைவு.இதுதொடர்பாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். பூமி போல, உயிரினங்கள் வாழத் தகுந்த கிரகங்கள் அங்கு ஏதேனும் இருக்கிறதா என்று விரைவில் தெரிவரும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பயனுள்ள தமிழ் இணையதளம்
தமிழ் கவிதைகள், கதைகள், பாடல் வரிகள், பாடல் ராகங்கள், உணவு செய்முறைகள், தமிழில் குழந்தை பெயர்கள் மற்றும் பலவகை தமிழ் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட இணையதளத்தை பார்வையிட சுட்டியை இங்கே சுட்டவும்
பிரிவு:
தமிழ் இணையம்
புதன், 29 செப்டம்பர், 2010
இரண்டு ஆண்டுகளில் மோசமான சூரியப்புயல் வருகிறது உலகம் அழியுமா ?
2012 ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி படுபயங்கர பாதிப்புகள் ஏற்படப்போவது நிச்சயம்’ என்கின்றனர் கொடைக்கானல் இந்திய வான்ஆராய்ச்சிக் கழக வல்லுனர்கள். ‘‘2012 டிசம்பர் 12ம் தேதி இயல்புக்கு மாறாக பயங்கர சூரியப் புயல் ஏற்பட உள்ளது.
இதை தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும், தவறினால் உலகம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அதிக உஷ்ணக் கதிர்கள் மற்றும் மின்காந்த அலைகளைத் தாங்கி உருவாகி வரப்போகும் சூரியப் புயல் பூமியை நெருங்கும் போது பயங்கரமான பாதிப்புகள் ஏற்படும். சூரியனில் இருந்து வெளியேறும் உஷ்ணக் காற்று பூமியை தகிக்கும். உலகம் முழுவதும் மின்சாரம், விண்கலங்கள், செயற்கைக்கோள், தொலைதொடர்பு, செல்போன் ஆகியவை அனைத்தும் ஸ்தம்பிக்கும்’’ என்று அந்த நிறுவனத்தின் விஞ்ஞானி சுந்தரராமன் கூறினார்.
கனடாவின் க்யூபெக் மாகாணத்தை இதேபோன்ற பயங்கர சூரியப் புயல் 1989&ம் ஆண்டு தாக்கியது. தொடர்ச்சியாக 9 நாட்கள் கனடாவே ஸ்தம்பித்துவிட்டது. 2012&ல் வரப்போகும் சூரியப் புயல் மொத்த பூமியையும் தாக்கப்போகிறது என்றும் கூறியுள்ளார். இதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர் மவுஸ்மி திக்பதியும் உறுதிப்படுத்தி உள்ளார்.

வெள்ளி, 17 செப்டம்பர், 2010
எல்லாம் வல்ல கூகுள்
கூகுள் இல்லாத வாழ்க்கையை நினைக்க முடியவில்லை. அது இல்லாமல் மனித இனம் இத்தனை காலம் பிழைத்தது அதிசயம். இதை ஓர் எழுத்தாளர் கொஞ்சம் மாற்றி சொல்கிறார்: கூகுள் நம்மை மடையனாக்கி விட்டது. அவர் நிகலஸ் கேர். புத்தகம் ‘தி ஷேலோஸ்: வாட் தி இன்டர்நெட் இஸ் டூயிங் டு அவர் பிரெய்ன்ஸ்’. மனித மூளையின் சிந்திக்கும் திறன் மழுங்கிப் போவதை அறிவியல் ஆதாரங்களோடு கேர் விவரிக்கிறார். வாசிக்கும்போது பயமும் சிரிப்பும் ஒருசேர பற்றுகிறது. அதுவே மழுங்கலின் வெளிப்பாடோ என்னவோ.
சிந்திப்பது இயக்கம். அதற்கு சில கருவிகள் உதவின. எழுத்து, எண், வரைபடம், அச்சு, கடிகாரம், கம்ப்யூட்டர் இதெல்லாம். ஒரு புத்தகம் படிக்கையில் மூளை அதில் ஒன்றுகிறது. ஆழ்ந்த சிந்தனை உருவாகிறது. அது புதிய காட்சிகளை மனக்கண்ணில் வரைகிறது. படைப்பாற்றல் பிறக்கிறது. மனிதன் அடுத்த நிலைக்கு முன்னேறுகிறான்.
இந்த இயக்கத்தை புரட்டிப் போடுகிறது இணையம். அதாவது கூகுள். வேகமாக நுனிப்புல் மேய்ந்து வெவ்வேறு இடங்களில் பொறுக்கிய தகவல் குப்பை நொடியில் வந்து விழும்போது மூளை ஒருமுகமாக சிந்திக்க அவசியம் இன்றிப் போகிறது . மின்னஞ்சல் வரவால் முகவரிகள் தொலைத்தோம். எழுத்து மரித்தது. அலைபேசி வந்தபின் எண்களை துறந்தோம். குறுந்தகவல் அனுப்பக் கற்றதும் பேச மறந்தோம். எண்ணும் எழுத்தும் மொழியும் அழிந்தபின் என்ன மிஞ்சும் என்று "கேர்" கேட்கிறார்.
கூகுள் அடுத்த சிகரத்துக்கு தாவிவிட்டது. உடனடி (இன்ஸ்டன்ட்). இன்னும் பொருத்தமான பெயர் கிடையாது. முதல் எழுத்தை தட்டியதும் மின்னல் வேகத்தில் உங்களுக்காக சிந்தித்து நீங்கள் தேட நினைத்ததை இழுத்து வந்து நிறுத்துகிறது இந்த ஜீபூம்பா. மின் அம்மி, இயந்திர ஆட்டுக்கல் நுழைந்த வேளையில் மிச்சமாகும் நேரத்தை உருப்படியாக செலவிடலாம் என்று நம்பினோம். உடல் பெருத்து நோய்கள் பெருகியதே விளைவு. ஒன்றை இழக்காமல் ஒன்றை பெற முடியாது என்பது இதுதான் போலும். இந்த தத்துவத்தை விரித்து பிடித்தால் பிரபஞ்சமே பார்வையில் படாது. தேவைகள் பூர்த்தியானதும் சம்பாதிப்பதை நிறுத்திக் கொள்வோம். இப்படி சபதம் எடுத்தால் என்ன ஆகும்? உரிய நேரத்தில் சபதம் மறந்துபோகும்.
(கூகுள் உதவியோடு தினகரன் இணையத்தில் படித்த செய்தி)

படித்ததில் பிடித்த சிந்தனைகள்
திங்கள், 30 ஆகஸ்ட், 2010
சர்வதேச நிதியங்களிலிருந்து கடன் பெறுவதில் இந்தியா முதலிடம்
உலக வங்கி உட்பட, சர்வதேச நிதியங்களிலிருந்து கடன் பெறுவதில், இந்தியா முதலிடம் வகிப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. வளரும் மற்றும் ஏழை நாடுகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வறுமையை ஒழிப்பதற்கும் உலக வங்கி உட்பட, சர்வதேச நிதியங்கள் வட்டியில்லாமல் கடன் வழங்குகின்றன.இந்த கடனுதவிகள் முறைப்படி செலவிடப்படுகிறதா என்பதையும் அந்த அமைப்புகள் கண்காணிக்கின்றன. இதில் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் நாடுகளுக்கு கடனுதவி அதிகரித்து வழங்கப்படுகிறது. இந்த வகையில் ஏற்கனவே வழங்கப்பட்ட கடன் உதவியை சிறப்பாக கையாண்டதற்காக, இந்தியாவுக்கு சர்வதேச நிதியங்கள் தாராளமாக கடன் வழங்கியுள்ளன.
இதனால், 2009-10ம் நிதியாண்டில் உலக வங்கி உட்பட, சர்வதேச நிதியங்களிடமிருந்து, 33 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியை பெற்று கடன்பெறும் ஏழை நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இதற்கடுத்து மெக்சிகோ 31 ஆயிரம் கோடி கடனுதவியை பெற்று இரண்டாம் இடம் வகிக்கிறது.தென்னாப்ரிக்கா (18,620 கோடி), பிரேசில் (18,130 கோடி), துருக்கி (14,700 கோடி) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இதில், சர்வதேச மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (ஐ.பி.ஆர்.டி.,) வாயிலாக 16 ஆயிரத்து 660 கோடியும், சர்வதேச வளர்ச்சி கூட்டமைப்பு (ஐ.டி.ஏ.,) மூலம் 6,370 கோடியும், உலக வங்கியிடமிருந்து (மொத்தம் 23,030 கோடி) இந்தியா கடனாக பெற்றுள்ளது.இதுதவிர வறுமை ஒழிப்பு திட்டங்களுக்காக அமெரிக்காவின் சர்வதேச விவசாய வளர்ச்சி நிதியம்(ஐ.எப்.ஏ.டி.,), பிரிட்டன் சர்வதேச வளர்ச்சித் துறை(டி.எப்.ஐ.,), ஜெர்மனி அரசு வங்கி மற்றும் ஜப்பான் வளர்ச்சி நிதியம் (ஓ.டி.ஏ.,) ஆகியவற்றிடமிருந்தும் அதிகளவு நிதி உதவி பெறப்பட்டுள்ளது.

அன்னை தெரசா பற்றி சில தகவல்கள்
பெயர் : அன்னை தெரசா.
பிறந்தது : யூகோஸ்லோவியாவில் உள்ள ஸ்கோப்ஜி நகரம்.
பிறந்த தேதி : 26-08-1910.
இறந்த தேதி : 05-09-1997.
இயற்பெயர் : ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ.
செல்லப்பெயர் : கோன்ஸா.
தந்தையின் பெயர் நிகோலா பொயாஜியூ.
தாயின் பெயர் திரானி பெர்னாய்.
உடன் பிறந்தவர்கள் : அக்கா அகா மற்றும் அண்ணன் லாஸர்.
மேலும் அன்னை தெரசா பற்றி அறிய இங்கே சுட்டவும்...
அன்னை தெரசாவின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி அவரது உருவம் பொறித்த நாணயம் 2010-ஆகஸ்ட்-28 அன்று வெளியிடப்பட்டது. அன்னை தெரசா கொல்கத்தாவில் தனது சேவைப் பணியை 5 ரூபாயுடன் தான் தொடங்கினார் என்று நாணயம் வெளியீட்டு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்னை தெரசாவின் சிறப்பான சேவைக்காக அவருக்கு 124 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் பாரத ரத்னா விருதும் அடங்கும்.

உலக சான்றோர்கள்
சிலம்பு மதுரைத்திட்டம் - ஒரு புதிய முயற்சி
"இன்று தமிழில் ஆயிரம், இலட்சமென இணைய தளங்கள் வந்துவிட்டன, செய்திகளுக்கும் பொழுது போக்குகளுக்கும் இருக்கும் இணைய தளங்கள் ஏராளம் ஏராளம், அவசர உலகில் விரைவு உணவுகள் தேடும் காலத்தில் பழஞ்சோற்றையும் தேடி சேர்க்கும் முயற்சி தான் இந்த சிலம்பு மதுரைத்திட்டம்" என்று தமிழர்களின் நிலையை சாடியிருக்கும் இந்த இணையதளத்தில் பல பழைய அருந்தமிழ் நூல்களை இலவசமாக தரவிறக்கம் செய்யலாம். புத்தகங்களைத் தரவிறக்குவதற்கான இணைப்பு "தமிழ் இணையங்கள்" பக்கத்தில் உள்ளது.
இணையப்பக்கத்தைப் பார்க்க இங்கே சுட்டவும்...
பிரிவு:
தமிழ் இணையம்
கூகுளின் தொலைபேசி சேவை
இணையதள கடவுளான கூகுள் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஜிமெயில், தொலைபேசி சேவையை துவக்கியுள்ளது. இதுதொடர்பாக, கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த சேவையை பெற விரும்புவோர், பின்வரும் வழிமுறையை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிமெயில் கணக்கைப் புகுபதிகை செய்து கொண்டு சாட் என்ற பிரிவில் சென்றால், அதில் ‘கால்’ என்ற பிரிவு இருக்கும் என்றும், அவ்வாறு இல்லையெனில், சாட் என்ற பிரிவிற்கு சென்று கால் என்பதை தேட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடா நாட்டிற்கு இலவசமாகவும், மற்ற நாடுகளுக்கு, குறைந்த கட்டணத்தில் பேசலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 16 ஜூலை, 2010
கோலம்...
என்னன்னை பூமியைத் தேடி
என்னவளின் விரல்களில் ஓடி
எழிலாய் வீழ்ந்த சிதறல்கள்.
கோலம்...
என்னவளின் விரல்களில் ஓடி
எழிலாய் வீழ்ந்த சிதறல்கள்.
கோலம்...
பிரிவு:
கவிதைகள்
அம்மா...
ஆண்டவனின் திருவுருவம்
அன்பின் மறுவுருவம்
அம்மா...
அன்பின் மறுவுருவம்
அம்மா...
பிரிவு:
கவிதைகள்
வெள்ளி, 2 ஜூலை, 2010
இணையத்தில் தமிழ் நூலகம்
பல தமிழ் நூல்கள் அழிந்து வரும் இச்சூழலில், அவற்றைப் பாதுகாக்க அவைகளை மின்மயமாக்கி அனைவருக்கும் உதவும் வகையில் ஓர் இணைய நூலகம் இலவசமாக வழங்குகின்றது. இவ்வலைப்பக்கத்தில் இருந்து நாம் பல அரிய தமிழ் நூல்களை பதிவிறக்கம் செய்யலாம். நாமும் அதனைப் பயன்படுத்தி நல்ல நூல்களைப் படித்து இன்புறுவோமாக...
அதற்கான இணைப்பு "தமிழ் இணையங்கள்" பக்கத்தில் உள்ளது
அதற்கான இணைப்பு "தமிழ் இணையங்கள்" பக்கத்தில் உள்ளது
பிரிவு:
தமிழ் இணையம்
செவ்வாய், 15 ஜூன், 2010
தமிழ் எண்கள் மற்றும் குறியீடுகள்
0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 100 | 1000 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
௦ | ௧ | ௨ | ௩ | ௪ | ௫ | ௬ | ௭ | ௮ | ௯ | ௰ | ௱ | ௲ |
நாள் மாதம் வருடம் செலவு மீதுவரவு மேலே ரூபாய் எண்ணுரு |
---|
| |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிரிவு:
தமிழ் கணினி
வியாழன், 27 மே, 2010
செம்மொழி மாநாட்டில் தமிழ் கணினி கண்காட்சி
கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து, தமிழ் இணைய மாநாடு ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கப் போவது நாமறிந்ததே. இதையொட்டி, கொடிசியா வளாகத்தில் தமிழ் கணினி கண்காட்சி நடக்கிறது. இதற்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்காக குளிர்சாதன வசதியுடன் 123 சிறு அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. அரங்குகளில் மின் ஆளுமை மண்டலம், தமிழ் பன்னாட்டு நிறுவன மண்டலம், தமிழ் வன்பொருள் மண்டலம், தமிழ் மென் பொருள் மண்டலம், தமிழ் பல்லூடக மண்டலம், தமிழ் விக்கிப்பீடியா, வலைப்பூக்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

தமிழ் இணையம்,
தமிழ் கணினி
சனி, 22 மே, 2010
தமிழ் நாடு அரசு பாட நூல்களை இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்...
நண்பர்களே,
ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான தமிழ் நாடு அரசு பாட நூல் நிறுவன நூல்கள் , தேர்வு வினாத்தாள்கள், இலவசமாக தரவிறக்க ஏதுவாக ஆன்லைனில் பிடிஎஃப் கோப்புகளாகவே கிடைக்கின்றன. இவற்றை உங்கள் அருகாமையில் உள்ள நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ அவசியம் அறிமுகப்படுத்துங்கள்.இதன் மூலம் மாணவ மாணவியர் எளிதாக செல்லுமிடமெல்லாம் கணிணித்திரையிலேயே தங்கள் பாடங்களை பார்க்கவோ படிக்கவோ முடியும், இதை தரவிறக்கி சேமித்து வைக்க ஒரே ஒரு குருவட்டோ, அல்லது ஒரு சிறிய விரலியோ போதும். வெளி நாட்டில் இருக்கும் பெற்றோராக இருந்தால் இங்கிருந்த படியே தங்கள் குழந்தைகள் படிக்கும் பாடத்திலிருந்து கேள்விகள் கேட்டோ, பாடத் திட்டம் பார்த்து கண்காணிக்கவோ முடியும். ஒரு சிலர் தங்கள் குழந்தைகளை தமிழ் நாட்டிலேயோ , வேறு மாநிலத்திலேயோ பிற மொழிப் பள்ளிகளில் சேர்த்திருக்கக் கூடும்.அவர்கள் தமிழ் படிக்க வாய்ப்பில்லாமல் கூட இருக்கும். அவர்கள் அந்த வகுப்புக்கான தமிழ் புத்தகத்தை தரவிறக்கிக் கொண்டு பெற்றோரின் உதவியுடன் படித்தும் வரலாம். எத்தனையோ ஏழை மாணவர்களுக்கு கூட இதை உங்கள் வீட்டு அச்சுப்பொறியில் கூட பிரதி எடுத்து தரலாம்.இந்த நடப்பு பாடத்திட்ட நூல்கள் இணையத்தில் 2007 ஆம் ஆண்டு முதல் கிடைக்கின்றதாம்.
புத்தகங்களைத் தரவிறக்குவதற்கான இணைப்பு "தமிழ் இணையங்கள்" பக்கத்தில் உள்ளது

திங்கள், 10 மே, 2010
ஒன்பதாவது இணைய மாநாடு - 2010 கோவை
தமிழ்நாட்டில் கோவையில் வரும் சூன் 23 முதல் 27 வரை ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு நடைபெற உள்ளது. இது கருத்தரங்கம், சமுதாய குழுமம், கண்காட்சி ஆகிய மூன்று சிறப்புக் கூறுகளைக் கொண்ட முழு அளவிலான தமிழ் இணைய மாநாடாக விளங்கும். தமிழ் கணிணியம், பொதுவான தமிழ் இணையம் ஆகியவற்றின் அண்மைக்கால முன்னேற்றங்கள்,சவால்கள் குறித்து அலசி ஆராயும் தொழில் நுட்பக் குழுவாக மாநாட்டு அரங்குகள் விளங்கும். உலக அளவிலான தமிழ் இணையத் தொழில் நுட்ப வல்லுனர்கள், ஆய்வறிஞர்கள் இம் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். தமிழ் இணைய மாநாடு வரிசையில் இது ஒன்பதாவது மாநாடு ஆகும். கடந்த மாநாடுகள் கொலோன், செருமனி (2009), சிங்கப்பூர், (1997, 2000, 2004), சென்னை (1999, 2003), கோலாலம்பூர், மலேசியா (2001), சான் பிரான்சிசுகோ, அமெரிக்கா (2002) ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளன.
பிரிவு:
தமிழ் கணினி
செவ்வாய், 27 ஏப்ரல், 2010
தமிழில் இலவச இணைய உலாவி
மொசில்லா பயர்பாக்ஸ் என்பது இணைய உலாவி(browser) ஆகும். இதன் துணையோடு நாம் இணையத்தில் உலாவ இயலும். இது முழுவதுமாக தமிழில் பயன்படுத்த தகுந்த வகையில் இலவசமாக வழங்கப்படுகிறது. நாமும் இதை பயன்படுத்தி இணையத்தை தமிழில் உலாவுவோமாக.
பிரிவு:
தமிழ் கணினி
சனி, 24 ஏப்ரல், 2010
இயங்குதளம் (operating System) என்றால் என்ன?
கணினியின் வன் மற்றும் மென்பொருள் வளங்களை நிர்வகிக்கக் கூடிய நிரல்களின் தொகுப்பை நாம் இயங்குதளம் (operating System) என்கிறோம். ஏற்கப்பட்ட கட்டளைகளுக்கிணங்க மின்னணு சாதனங்களை, சீராக இயக்கவல்லது இயங்கு தளம் ஆகும். நினைவகங்களை பகுத்தொதுக்கி கட்டுப்படுத்துவது, கொடுக்கப் படும் வன்பொருள் சார் கோரிக்கைகளுக்கு முன்னுரிமைக் கொடுத்து செயல்படுத்துவது, உள்ளீட்டு மற்றும் வெளியீட்டுக் கருவிகளை நிர்வகிப்பது, பிணையத்திற்கான வசதிகள், கோப்புகளின் நிர்வாகம் முதலியன இயங்குதளங்களின் அடிப்படை பணிகளாகும். பெரும்பான்மையான இயங்குதளங்கள் முனையத்தினை, முதன்மையான இடைமுகப்பாகக் கொண்டு இயங்குகின்றன. அதீத பயன்பாடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு, அவற்றுள் சில வரைகலை இடைமுகப்பினையும் வழங்குகின்றன. ஏனைய வன்மென் பொருட்களுக்கும், செயலிகளுக்கும் இயக்குதளம் அடிப்படையாக அமைகின்றது.
பிரிவு:
தமிழ் கணினி
புதன், 21 ஏப்ரல், 2010
தமிழ் கணினி விழிப்புணர்வு பற்றி...
தற்போது லினக்ஸ் இயங்குதளம் முழுவதுமாக தமிழில் இலவசமாக வழங்கப்படுகிறது. எனினும் நம் தமிழ் மக்கள் அதனை பயன்படுத்துவதில்லை. அனைவரும் விண்டோஸ் இயங்குதளத்தை அனுமதியின்றி பயன்படுத்தி வருகின்றனர். நம் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். இந்நிலை மாற நாம் முயல்வோமாக.
பிரிவு:
தமிழ் கணினி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)