வணக்கம்

எனது வலைப்பதிவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். எனது வலைப்பதிவு பற்றிய தங்களின் கருத்துக்களை vsathishkumarmca(at)gmail(dot)com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
நன்றி

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

எல்லாம் வல்ல கூகுள்

கூகுள் இல்லாத வாழ்க்கையை நினைக்க முடியவில்லை. அது இல்லாமல் மனித இனம் இத்தனை காலம் பிழைத்தது அதிசயம். இதை ஓர் எழுத்தாளர் கொஞ்சம் மாற்றி சொல்கிறார்: கூகுள் நம்மை மடையனாக்கி விட்டது. அவர் நிகலஸ் கேர். புத்தகம் ‘தி ஷேலோஸ்: வாட் தி இன்டர்நெட் இஸ் டூயிங் டு அவர் பிரெய்ன்ஸ்’. மனித மூளையின் சிந்திக்கும் திறன் மழுங்கிப் போவதை அறிவியல் ஆதாரங்களோடு கேர் விவரிக்கிறார். வாசிக்கும்போது பயமும் சிரிப்பும் ஒருசேர பற்றுகிறது. அதுவே மழுங்கலின் வெளிப்பாடோ என்னவோ.

சிந்திப்பது இயக்கம். அதற்கு சில கருவிகள் உதவின. எழுத்து, எண், வரைபடம், அச்சு, கடிகாரம், கம்ப்யூட்டர் இதெல்லாம். ஒரு புத்தகம் படிக்கையில் மூளை அதில் ஒன்றுகிறது. ஆழ்ந்த சிந்தனை உருவாகிறது. அது புதிய காட்சிகளை மனக்கண்ணில் வரைகிறது. படைப்பாற்றல் பிறக்கிறது. மனிதன் அடுத்த நிலைக்கு முன்னேறுகிறான்.
இந்த இயக்கத்தை புரட்டிப் போடுகிறது இணையம். அதாவது கூகுள். வேகமாக நுனிப்புல் மேய்ந்து வெவ்வேறு இடங்களில் பொறுக்கிய தகவல் குப்பை நொடியில் வந்து விழும்போது மூளை ஒருமுகமாக சிந்திக்க அவசியம் இன்றிப் போகிறது . மின்னஞ்சல் வரவால் முகவரிகள் தொலைத்தோம். எழுத்து மரித்தது. அலைபேசி வந்தபின் எண்களை துறந்தோம்.   குறுந்தகவல் அனுப்பக் கற்றதும் பேச மறந்தோம். எண்ணும் எழுத்தும் மொழியும் அழிந்தபின் என்ன மிஞ்சும் என்று "கேர்" கேட்கிறார்.

கூகுள் அடுத்த சிகரத்துக்கு தாவிவிட்டது. உடனடி (இன்ஸ்டன்ட்). இன்னும் பொருத்தமான பெயர் கிடையாது. முதல் எழுத்தை தட்டியதும் மின்னல் வேகத்தில் உங்களுக்காக சிந்தித்து நீங்கள் தேட நினைத்ததை இழுத்து வந்து நிறுத்துகிறது இந்த ஜீபூம்பா. மின் அம்மி, இயந்திர ஆட்டுக்கல் நுழைந்த வேளையில் மிச்சமாகும் நேரத்தை  உருப்படியாக செலவிடலாம் என்று நம்பினோம். உடல் பெருத்து நோய்கள் பெருகியதே விளைவு. ஒன்றை இழக்காமல் ஒன்றை பெற முடியாது என்பது இதுதான் போலும். இந்த தத்துவத்தை விரித்து பிடித்தால் பிரபஞ்சமே பார்வையில் படாது. தேவைகள் பூர்த்தியானதும் சம்பாதிப்பதை நிறுத்திக் கொள்வோம். இப்படி சபதம் எடுத்தால் என்ன ஆகும்? உரிய நேரத்தில் சபதம் மறந்துபோகும்.
(கூகுள் உதவியோடு  தினகரன் இணையத்தில் படித்த செய்தி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக