வணக்கம்

எனது வலைப்பதிவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். எனது வலைப்பதிவு பற்றிய தங்களின் கருத்துக்களை vsathishkumarmca(at)gmail(dot)com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
நன்றி

வியாழன், 27 மே, 2010

செம்மொழி மாநாட்டில் தமிழ் கணினி கண்காட்சி

கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து, தமிழ் இணைய மாநாடு ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கப் போவது நாமறிந்ததே. இதையொட்டி, கொடிசியா வளாகத்தில் தமிழ் கணினி கண்காட்சி நடக்கிறது. இதற்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்காக குளிர்சாதன வசதியுடன் 123 சிறு அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. அரங்குகளில் மின் ஆளுமை மண்டலம், தமிழ் பன்னாட்டு நிறுவன மண்டலம், தமிழ் வன்பொருள் மண்டலம், தமிழ் மென் பொருள் மண்டலம், தமிழ் பல்லூடக மண்டலம், தமிழ் விக்கிப்பீடியா, வலைப்பூக்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

சனி, 22 மே, 2010

தமிழ் நாடு அரசு பாட நூல்களை இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்...

நண்பர்களே,

ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான தமிழ் நாடு அரசு பாட‌ நூல்  நிறுவன நூல்கள் , தேர்வு வினாத்தாள்கள், இலவசமாக தரவிறக்க ஏதுவாக ஆன்லைனில் பிடிஎஃப் கோப்புகளாகவே கிடைக்கின்றன. இவற்றை உங்கள் அருகாமையில் உள்ள நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ அவசியம் அறிமுகப்படுத்துங்கள்.இதன் மூலம் மாண‌வ மாண‌வியர் எளிதாக செல்லுமிடமெல்லாம் கணிணித்திரையிலேயே தங்கள் பாடங்களை பார்க்கவோ படிக்கவோ முடியும், இதை தரவிறக்கி சேமித்து வைக்க ஒரே ஒரு குருவட்டோ, அல்லது ஒரு சிறிய விரலியோ  போதும். வெளி நாட்டில் இருக்கும் பெற்றோராக இருந்தால் இங்கிருந்த படியே தங்கள் குழந்தைகள் படிக்கும் பாடத்திலிருந்து கேள்விகள் கேட்டோ, பாடத் திட்டம் பார்த்து கண்காணிக்கவோ முடியும். ஒரு சிலர் தங்கள் குழந்தைகளை தமிழ் நாட்டிலேயோ , வேறு மாநிலத்திலேயோ  பிற மொழிப் பள்ளிகளில் சேர்த்திருக்கக் கூடும்.அவர்கள் தமிழ் படிக்க வாய்ப்பில்லாமல் கூட இருக்கும். அவர்கள் அந்த வகுப்புக்கான தமிழ் புத்தகத்தை தரவிறக்கிக் கொண்டு பெற்றோரின் உதவியுடன் படித்தும் வரலாம். எத்தனையோ ஏழை மாணவர்களுக்கு கூட இதை உங்கள் வீட்டு அச்சுப்பொறியில் கூட பிரதி எடுத்து தரலாம்.இந்த நடப்பு பாடத்திட்ட நூல்கள் இணையத்தில் 2007 ஆம் ஆண்டு முதல் கிடைக்கின்றதாம்.
 புத்தகங்களைத் தரவிறக்குவதற்கான இணைப்பு "தமிழ் இணையங்கள்" பக்கத்தில் உள்ளது

திங்கள், 10 மே, 2010

ஒன்பதாவது இணைய மாநாடு - 2010 கோவை

    தமிழ்நாட்டில் கோவையில் வரும் சூன் 23 முதல் 27 வரை ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு நடைபெற உள்ளது. இது கருத்தரங்கம், சமுதாய குழுமம், கண்காட்சி ஆகிய மூன்று சிறப்புக் கூறுகளைக் கொண்ட முழு அளவிலான தமிழ் இணைய மாநாடாக விளங்கும். தமிழ் கணிணியம், பொதுவான தமிழ் இணையம் ஆகியவற்றின் அண்மைக்கால முன்னேற்றங்கள்,சவால்கள் குறித்து அலசி ஆராயும் தொழில் நுட்பக் குழுவாக மாநாட்டு அரங்குகள் விளங்கும். உலக அளவிலான தமிழ் இணையத் தொழில் நுட்ப வல்லுனர்கள், ஆய்வறிஞர்கள் இம் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். தமிழ் இணைய மாநாடு வரிசையில் இது ஒன்பதாவது மாநாடு ஆகும். கடந்த மாநாடுகள் கொலோன், செருமனி (2009), சிங்கப்பூர், (1997, 2000, 2004), சென்னை (1999, 2003), கோலாலம்பூர், மலேசியா (2001), சான் பிரான்சிசுகோ, அமெரிக்கா (2002) ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளன.