வணக்கம்

எனது வலைப்பதிவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். எனது வலைப்பதிவு பற்றிய தங்களின் கருத்துக்களை vsathishkumarmca(at)gmail(dot)com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
நன்றி

செவ்வாய், 28 டிசம்பர், 2010

2010ல் முடங்கிப் போன சேவை தளங்கள்

அவ்வப்போது இணையத்தில், சில சேவைத் தளங்கள் மிகப் பிரமாதமாக, புதிய கோணங்களில் மக்களுக்கு வசதிகளைத் தருவதற்காகத் தொடங்கப்படும். பல மக்களிடையே பிரபலமாகி வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கும். சில தளங்கள், தொடர்ந்து ஆதரவு இல்லாத நிலையில் முடங்கிப் போகும். அது போல 2010 ஆம் ஆண்டில் இயக்கத்தை நிறுத்திய சில தளங்களை இங்கு காணலாம். இந்த தளங்களில் சில அவற்றின் பெயரைக் கேட்டவுடனேயே உங்கள் மனதில் அவை என்ன மாதிரியான சேவைக்குத் தொடங்கப்பட்டன என்று தெரிய வரும். சில தளங்கள் ஆரம்பிக்கப்பட்டனவா என்ற கேள்வியை உங்கள் மனதில் தோற்றுவிக்கும். இங்கு தரப்பட்டுள்ள தளங்கள் குறித்து எண்ணிப் பாருங்கள்.
1. கூகுள் வேவ் மற்றும் பஸ்: 2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கூகுள் நிறுவனம் வேவ் (Wave) என்று ஒரு சேவையைத் தொடங்கியது. இந்த தளம் இமெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் அல்லது வேர்ட் ப்ராசசர் என எந்த வகைக்கும் உள்ளாக வரவில்லை. ஆனால் இந்த வசதிகள் அனைத்தும் திணிக்கப்பட்ட ஒரு ஸ்வீட் கொழுக்கட்டையாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இதனைப் பயன்படுத்தியவர்கள், இதன் செயல் தன்மை புரிபடாமல் தலையைப் பிய்த்துக் கொண்டனர். அடுத்து ஒரு ஆண்டுக்குப் பின் கூகுள் பஸ் (Buzz) என்று இன்னொரு வசதியைத் தொடங்கியது. இது ஜிமெயிலின் இணைந்த பகுதியாய் ஆக்கப்பட்டது. பின்னர் இது நீக்கப்பட்டது. கூகுள் அமைத்த வேவ் இன்னும் மூடப்படவில்லை. இதனை நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி இருந்தால், இப்போதும் சென்று பழைய தகவல்களைப் பெறலாம். ஆனால் ஆதத்த் வசதி எடுக்கப்பட்டது.
2. கூல் (Cuil) இணைய தேடுதளம்: இந்த கூல் தளம் குறித்து கம்ப்யூட்டர் மலரில் பெரிதாக எழுதி இருந்தோம். இந்த தளத்தை அமைத்தவர்களும், உலகையே மாற்றும் தேடுதல் தளம் என்று இதனை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் எதனையும் மாற்றவில்லை. இந்த தளம் அறிமுகப்படுத்தப்பட்டபோது பலர் இந்த தளத்தை முற்றுகை இட்டதால், அதன் சர்வர் திணறியது. அப்போது இந்த தேடுதல் தளம் தானாக மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தவறுதலான முடிவுகளைத் தரத் தொடங்கியது. அறிமுகத்திற்கு முன்னால், இது குறித்து கூல் தளத்தை அமைத்தவர்கள் பல விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தனர். 12,000 கோடி இணைய தளங்கள் இதனுடன் இணைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. கூகுள் 4,000 தளங்களைத்தான் இன்டெக்ஸ் செய்து வைத்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் கூல் தேடுதளம், தளங்களின் பொருள் அடிப்படையில் வரிசைப்படுத்துவதாக அறிவித்தது. கூடுதலாக சார்ந்த தளங்களின் பட்டியலையும் தருவதாகக் கூறியது. ஆனால் எந்த அறிவிப்பும் இன்றி ஒருநாள் கூல் தேடுதல் தளம் மூடப்பட்டது.
3. பேஸ் புக் லைட் (Facebook Lite): 2009 ஆம் ஆண்டு செப்டம்பரில் பேஸ்புக் தளத்தின் சிறிய அளவிலான சுருக்குத் தளமாக பேஸ்புக் லைட் அறிமுகமானது. இதன் மூலம் வேகம் குறைந்து செயல்படும் இணைய இணைப்பில், வேகமாக பேஸ்புக் தளத்தைக் கையாள முடியும் என பேஸ்புக் திட்டமிட்டது. lite.facebook.com என்ற தளம் உருவாக்கப்பட்டது. இந்த தளம் சென்றவர்கள், இதில் விளம்பரங்கள் மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால், இந்த சேவையும் தளமும் அடுத்த சில மாதங்களிலேயே எந்தவித அறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டது.
4. விண்டோஸ் லைவ் ஸ்பேஸ்: கூகுள் நிறுவனத்தின் வேவ் போல, மைக்ரோசாப்ட் வழங்கிய லைவ் ஸ்பேஸ் வசதியும் இன்னும் மூடப்படவில்லை. ஆனால், அடுத்த மாதம் முதல் இந்த தளத்தில் உள்ள செய்திகளைப் பார்க்கலாம்; புதியதாக எதனையும் இணைக்க முடியாது. இதற்குப் பதிலாக, மைக்ரோசாப்ட் வேர்ட் ப்ரெஸ் தளத்திற்குத் தன் பதிவாளர்களை மாற்றிக் கொள்ளச் செய்தது. மேலே காட்டப்பட்டுள்ள தளங்களைப் போல, பல இணைய சேவைத் தளங்கள் 2010 ஆம் ஆண்டில் மூடப்பட்டன. ஆனால் அவை மக்களிடம் அவ்வளவாகப் பிரபலமாகத தளங்கள் என்பதால், இங்கு குறிப்பிடப்படவில்லை.

ஆசியாவின் மிகப்பெரிய "டூல்ரூம்'

புனேயில் உள்ள டாடா மோட்டார்ஸ் தொழிற் சாலையில், "ஆசியாவின் மிகப்பெரிய டூல்ரூம்' உள்ளது. ஒவ்வொரு இடத்திலும் செய்யப்படும் உபகரணங்களை, ஒரு இடத்திற்கு கொண்டு வந்து "அசெம்பிளிங்' செய்ய அதிக காலமாகும். எனவே வெளிநாட்டில் இருந்து அனைத்து வகை இயந்திரங்களையும் இறக்குமதி செய்து கார், டிரக்கு களுக்குத் தேவையான அனைத்து உதிரிப்பாகங்கள், முக்கிய பாகங்களை உருவாக்கும் விதத்தில் இந்த "டூல்ரூம்' உள்ளது. டாடா மோட்டார்சில் சிறப்பு அனுமதி வாங்கினால், இந்த "டூல்ரூமை' பார்வையாளர்கள் பார்வையிட முடியும். 20 செகண்டுகளுக்கு ஒரு டிரக்கை உருவாக்கும் விதத்தில் இந்த "டூல்ரூம்' உள்ளது. புதிய நானோ காரும் இந்த "டூல்ரூமில்' தான் உருவாக்கப்பட்டது. பார்வையாளர்கள் பேட்டரி காரில் அமர்ந்து, இந்த டூல்ரூமைப் பார்வையிட முடியும். இறங்கி நடந்து சென்று பார்வையிட அனுமதி இல்லை. 60 வகையான வண்டிகள் இந்த "டூல்ரூமில்' உருவாக்கப்படுகின்றன. ரோபோக்கள் இந்த "டூல்ரூமில்' பணிபுரிகின்றன.

2010ல் இணையம்

இணையப் பயன்பாட்டில், இந்தியா 2010 ஆம் ஆண்டில் மிகப் பெரிய அளவில் வளர்ந்து இருந்தது. இந்திய இன்டர்நெட் மற்றும் மொபைல் பயனாளர் அமைப்பு வெளியிட்ட தகவல்களின்படி, ஏறத்தாழ 6 கோடி பேர் இணையத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளனர். 74 லட்சம் பிராட்பேண்ட் இணைப்பு பயன்படுத்தி வந்தனர். இந்த ஆண்டின் பெரும்பாலான வளர்ச்சி கிராமப் புறங்களிலேயே இருந்தது. இந்த வேகத்தில் சென்றால், 2030 ஆம் ஆண்டில் இந்தியாவின் அனைத்து பகுதிகளும் வயர்லெஸ் இணைப்பில் இருக்கும் என்று பல அமைப்புகள் தெரிவித்துள்ளன. சரி, இந்தியர்கள் இணையத்தில் எதனை விரும்பிப் பார்த்தனர்? கூகுள் வெளியிட்ட தகவல் தொகுப்பின்படி, அதிகம் தேடப்பட்டவை பாடல்களே. அடுத்ததாக பேஸ்புக், கூகுள் மற்றும் யு-ட்யூப் தளங்களே. இருப்பினும் இந்த பட்டியலில் முதல் இடத்தை வழக்கம்போல பிடித்திருப்பது இந்திய ரயில்வே டிக்கட் முன்பதிவு செய்திடும் தளமே. இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் நடந்தேறிய அரசியல் பரபரப்புகள் பல இணையம் வழியாகவே மக்களுக்குத் தெரிய வந்தன. குறிப்பாக ராடியா டேப் உரையாடல்கள் பல யு-ட்யூப் தளங்களில் பதியப்பட்டு கேட்கப்பட்டன. இந்த ஆண்டு தொடக்கத்தில் சீன அரசுக்கும் கூகுள் நிறுவனத்திற்கும் இணையம் தொடர்பாக பெரும் சச்சரவு ஏற்பட்டது. கூகுள் தான் ஒத்துக் கொண்ட ஒப்பந்த வரையறைகளை மீறி விட்டதாக அறிவித்தது. இதனால், தன் சீன தளத்திற்கு வந்தவர்களை, தன்னுடைய ஹாங்காங் தளத்திற்கு கூகுள் திருப்பிவிட, இதனைத் தான் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சீன அரசு அறிவித்தது. இதனால், இந்தியா, ஜெர்மனி மற்றும் அமெரிக்க இணைய தளங்கள் சீனர்களால் கைப்பற்றப்பட்டன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது விக்கிலீக்ஸ், சீன இணைய தேடுதளம் பைடு, இதற்கு ஒத்துழைத்ததாக விக்கிலீக்ஸின் தற்போதைய செய்தி அறிவிக்கிறது. பொதுவாக அமைதியாக இருக்கும் கூகுள் நிறுவனம், தன்னுடைய சீன செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளப்போவதாக மிரட்டியது. அதனை ஒரு அளவில் மேற்கொள்ளவும் செய்தது. இன்னும் சீனாவிற்கும் கூகுள் நிறுவனத்திற்கும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. வரும் ஆண்டு நிச்சயம் இணையத்திற்கு ஓர் உறுதியான வளர்ச்சியைத் தரும் என எதிர்பார்க்கலாம். இதன் மூலம் வர்த்தகம் வளர்ந்து மக்கள் வாழ்க்கை வளம் பெறும் என்றும் எதிர்பார்க்கலாம்.

சனி, 4 டிசம்பர், 2010

விண்வெளியை சுத்தம் செய்ய 9,000 கோடி


Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update பூமியைச் சுற்றியுள்ள விண்வெளி பகுதியை சுத்தம் செய்ய ரஷ்யா 9,000 கோடி செலவிட திட்டமிட்டுள்ளது. பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக, உலக நாடுகள் அவ்வப்போது செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகின்றன. இவை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு செயலிழந்து விடுகின்றன. இன்னும் சில செயற்கைக் கோள்கள் தோல்வியடைகின்றன. இதனால் ஏற்படும் கழிவுப் பொருட்கள் வானத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக, உடைந்த செயற்கைக் கோள்களின் பாகங்களை அகற்றுவதற்காக ரஷ்ய விண்வெளி கழகம் (எனர்ஜியா) திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஸி9 ஆயிரம் கோடி செலவில் ஒரு அணுசக்தியில் இயங்கும் ஒரு செயற்கைக் கோள் விண்வெளிக்கு அனுப்பப்படும். இது மிதக்கும் கழிவுகளை பூமியை நோக்கி தள்ளிவிடும். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சுமார் 600 செயற்கைக் கோள்களின் உடைந்த பாகங்கள் விண்வெளியிலிருந்து அகற்றப்படும் என எனர்ஜியா தெரிவித்துள்ளது. எனினும் இந்த செயற்கைக்கோள் 2020ல் தான் தயாராகும்.

10 கோடி ஆண்டு பழைய முதலை படிமங்கள் மீட்பு




Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

பாங்காக்: 10 கோடி ஆண்டு பழமையான முதலைகளின் எலும்புக் கூடுகள் தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் மகாசரகம் பல்கலைக்கழக அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் குழு கோம்சான் லாப்ரசர்ட் தலைமையில் சமீபத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தினர். இதில் சுமார் 10 கோடி ஆண்டு பழமையான ஏராளமான முதலைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த முதலைகளுக்கும் தற்போதைய முதலைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். முதலை படிமங்களின் பல் அமைப்பை கொண்டு முதல்கட்டமாக நடைபெற்ற ஆராய்ச்சியில் அவை மீன்களை மட்டுமே உணவாகக் கொண்டு வாழ்ந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

பழங்கால முதலைகள் தரையில் வாழ்ந்திருக்க வேண்டும். மிக விரைவாக ஓடும் திறன் பெற்றிருந்திருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இது பற்றி தொடர் ஆராய்ச்சி நடந்து வருகிறது.

பிழைத்தது ஜீவநதி

தாமிரபரணி நதியில் மணல் அள்ளுவதற்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் மீதமிருக்கும் ஒரே ஜீவ நதியான தாமிரபரணியை ஈவு இரக்கம் இல்லாமல் ஒழித்துக் கட்டும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க உயர் நீதிமன்றம் முன்வந்திருப்பதை இயற்கை ஆர்வலர்களும் அடுத்த தலைமுறைகள் மீது அக்கறை கொண்டவர்களும் மனதார வரவேற்கின்றனர். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

கட்டுமான வேலைகளுக்கு கணிசமான மணல் தேவைப்படுகிறது. ஆற்றுப் படுகைகளில் அரசு குறிப்பிடும் இடங்களில் மணல் அள்ளி விற்பதன் மூலம் அந்த தேவை நிறைவேற்றப்பட்டது. பொருளாதார வளர்ச்சியால் எட்டுத் திசையிலும் பிரமாண்ட கட்டிடங்கள் எழத் தொடங்கியதில் இருந்து  ஆறுகளில் மணல் அள்ளுவது பணம் அள்ளுவதற்கு சமமாக பெருந்தொழிலாக உருவெடுத்தது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அதே நதிகள், அதே மணல் வளம் இருந்துவரும் நிலையில் திடீரென தேவை எகிறினால் என்ன ஆகும்? வலிமை மிகுந்தவர்கள் தனி வழி வகுத்தார்கள். பொறுப்பான அரசுகள் கொண்டுவந்த அனைத்து கட்டுப்பாடுகளும் பகிரங்கமாக மீறப்பட்டன.

 ‘மணல் கொள்ளை’ என்ற பிரயோகம் குழந்தைகளும் புரிந்துகொள்ளும் அளவுக்கு புழக்கத்தில் வந்தது. திருட்டு மணலுடன் இருட்டில் செல்லும் லாரிகளை தடுக்க முயன்ற நேர்மையான அதிகாரிகள் வாகனங்களால் மோதி கொல்லப்பட்ட சம்பவங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணர்த்தின. எந்திரங்களை பயன்படுத்தி எந்த இடத்தில் வேண்டுமானாலும் சகட்டு மேனிக்கு மணல் அள்ளியதால் நீண்ட நெடிய வரலாற்று பெருமை மிகுந்த நதிகள் மூளியாக்கப்பட்டு சீர்குலைந்தன. தாமிரபரணியை பொருத்தவரை குடிப்பதற்கும் குளிப்பதற்கும் பாசனத்துக்கும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரே நதி.  ஒருங்கிணைந்த நெல்லைச் சீமையின் நதிக்கரை நாகரிக பாரம்பரியம் உலகப் புகழ் பெற்றது. பல ஆண்டுகள் தொடர்ந்த போராட்டத்தின் விளைவாக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தாமிரபரணியின் மறுபிறவிக்கு வழி வகுக்கும் என நம்பலாம்.

சச்சினுக்கு கிடைக்குமா லாரஸ் விருது

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் லாரஸ் விருதை (2011) கைப்பற்றும் வாய்ப்பு, இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கிடைத்துள்ளது. விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்கும், வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டு தோறும் லாரஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டுக்கான (2011) இவ்விருதுகள் பிப்ரவரியில் வழங்கப்பட உள்ளன. இதற்கான விளையாட்டு வீரர்கள் பரிந்துரை பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் இந்த ஆண்டு கிரிக்கெட் அரங்கில் பல புதிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 200 ரன்கள் (எதிர்-தென் ஆப்ரிக்கா, குவாலியர்) எடுத்த முதல் வீரர், டெஸ்ட் அரங்கில் 14 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் (எதிர்-ஆஸ்திரேலியா, பெங்களூரு) உள்ளிட்ட உலக சாதனைகளை படைத்துள்ளார். இவருடன் இணைந்த மற்றொரு கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் பெயரும், லாரஸ் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இவர், இந்த ஆண்டு டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுகளை (எதிர்-இந்தியா, காலே) வீழ்த்திய உலகின் முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இவர்களுடன் டென்னிஸ் வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), "பார்முலா-1' சாம்பியன் செபாஸ்டியன் வெட்டெல் (ஜெர்மனி), கால்பந்து வீரர்களான டீகோ போர்லான் (உருகுவே), இனியஸ்டா (ஸ்பெயின்), லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), கோல்ப் வீரர் கிரீம் மெக்டவல் (அயர்லாந்து) உள்ளிட்டோர் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களிலிருந்து 6 பேர், லாரஸ் மீடியா தேர்வுக் குழுவினர் மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்படும். பின்னர் இந்த 6 பேரிலிருந்து ஒருவர், ரகசிய ஓட்டெடுப்பின் மூலம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரராக தேர்வு பெறுவர். விருது வழங்கும் நிகழ்ச்சி பிப். 7 ம் தேதி அபுதாபியில் நடக்க உள்ளது.

டேப்ளட் பிசி பயன்பாடு அதிகரிக்கும்

அமெரிக்காவில் இயங்கும் டிஜிடைம்ஸ் ரிசர்ச் நிறுவனம், அண்மையில் மேற்கொண்ட டிஜிட்டல் சாதனப் பயன்பாடு குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஆண்டு முதல் டேப்ளட் பிசிக்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்கும் என்று காட்டியுள்ளது. 2013 ஆம் ஆண்டில், 10 கோடி டேப்ளட் பிசிக்கள், மக்களுக்குத் தேவைப்படும் என அறிவித்துள்ளது.  எதிர்காலம், மொபைல் இன்டர்நெட் இணைப்பில்தான் இயங்கும் என்று தெரிவித்துள்ள இந்த நிறுவனம், இதனால், ஸ்மார்ட் போன், டேப்ளட் பிசி மற்றும் நோட்புக் கம்ப்யூட்டர்கள் பரவலாக மக்களால் பயன்படுத்தப்படும் என்றும் கூறி உள்ளது.  2013ல் 80 கோடி ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்படும். இது இந்த ஆண்டைக் காட்டிலும் இரு மடங்கு கூடுதலாகும். இதனால்,  டேப்ளட் பிசிக்கள் பால்  மக்கள் கவனம் திரும்பும்.  இருந்தாலும், ஸ்மார்ட் போன் அளவிற்கு டேப்ளட் பிசியின் பயன்பாடு அமைய சில காலம் ஆகும். 2013 வரை இதன் பயன்பாடு 12% முதல் 13% வரையில் மட்டுமே இருக்கும். அதன் பின்னரே, மிக அதிகமாக இது வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.  இன்று வரை ஆப்பிள் நிறுவனத்தின் டேப்ளட் பிசியான, ஐ-பேட் தான் அதிகம் விற்பனையாகியுள்ளது. 42 லட்சம் ஐ-பேட் சாதனங்களை மக்கள் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.  இது ஆப்பிள் மட்டுமே, இந்தப் பிரிவில் சில காலம் இயங்கியதால் ஏற்பட்ட விற்பனை. தற்போது சாம்சங், எச்.பி. உட்பட பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் டேப்ளட் பிசி தயாரிப்பில் இறங்கியுள்ளன. இந்த வகையில் ஆர்.ஐ.எம். நிறுவனத்தின், பிளேபுக் டேப்ளட் பிசி, இச்சந்தையில் மிகப் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.