வணக்கம்

எனது வலைப்பதிவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். எனது வலைப்பதிவு பற்றிய தங்களின் கருத்துக்களை vsathishkumarmca(at)gmail(dot)com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
நன்றி

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

கணிதம், விஞ்ஞானம் மற்றும் எந்த பாடங்களையும் கற்றுக்கொள்வதற்கு உதவும் இணையத்தளங்கள்

தற்காலத்தில் மாணவர்களுக்கு அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கு இணையமே முக்கிய ஆதாரமாக இருக்கிறது.சிலர் இணையத்திலேயே பாடங்களை படித்து முடிக்கவும் செய்கிறார்கள். இதேபோல் இணையத்தில் கணிதம், விஞ்ஞான பாடங்களையும் மற்றும் ஏனைய பாடங்களையும் கற்பதற்கு உதவி புரிகின்ற  இணையத்தளங்களைப்பற்றிய தகவல்கள் இங்கே.

கணித சிக்கல்களை தீர்ப்பதற்கு உதவுகிறது இந்த தளம்.
எந்த கணிப்பீடாயினும் அதன் விபரங்களை கொடுத்ததும் ஒவ்வொரு படிமுறையாக காட்டுகிறது இந்த தளம்.
இணைப்பு: http://www.wolframalpha.com/

இயற்கணிதம்(algebra),  நுண்கணிதம்(calculus),  முக்கோணவியல்(trigonometry),  புள்ளியியல்(statistics)  போன்றவற்றையும் மற்றும் ஏனைய கணித சமன்பாடுகளின் பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது இத்தளம்
இணைப்பு: http://www.mathway.com/

வேறு மொழிகளை கற்றுக்கொள்வதற்கும், உங்கள் பேச்சு திறமையை வளர்த்துக் கொள்வதற்கும் உதவுகிறது இந்த தளம்.
இணைப்பு: http://www.babbel.com/

வேதியியல்(chemistry) பாடங்களை கற்பவர்களுக்கு
இணைப்பு: http://www.ptable.com/


பொருளியல்(Economics), வணிகம்(Business), அரசியல்(Politics), நிறுவனம்(Enterprise), சட்டம்(Law), சமூகவியல்(Sociology), வரலாறு(History), சமயங்கள்(Religious) பாடங்களுக்குரிய குறிப்புகளை வழங்குகிறது இந்த தளம்
இணைப்பு: http://www.tutor2u.com/

ஆங்கில மொழித்திறமையை வளர்த்துக்கொள்வதற்கு உதவுகிறது இந்த தளம்.
இணைப்பு: http://verbalearn.com/

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

தமிழ்நாட்டில் தினமும் 130 குழந்தைகள் பலி

யுனிசெப் நிறுவனம் இந்தியா முழுவதும் குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய கணக்கெடுப்பு நடத்தியது.அதில் தமிழ்நாட்டில் கிருமிகள் தாக்குதல் மற்றும் சத்து குறைபாடுகள் காரணமாக குழந்தைகள் இறப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 130 குழந்தைகள் வரை பலியாகின்றன. இதே போல் நாடு முழுவதும் கிருமி தாக்குதல் மற்றும் சத்து குறைபாடு காரணமாக 5 ஆயிரம் குழந்தைகள் இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்களை யுனி செப் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி ஏஞ்செலா வால்க்கர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

இந்தியாவில் குழந்தைகளுக்கு சத்து குறைபாடு பிரச்சினை உள்ளது. இது ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமாக உள்ளது. பாதி குழந்தைகள் சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதை தவிர்க்க வேண்டுமானால் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதன் பிறகு சத்தான உணவு வகைகள் கொடுக்க வேண்டும். இது குழந்தை இறப்பை தடுக்கும். இதற்கு மக்களிடையே விழிப்புணர்வு அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

புதன், 2 பிப்ரவரி, 2011

ஜெட்டா பைட் என்றால் என்ன தெரியுமா ?

மெகா பைட், கிகா பைட், டெரா பைட் தெரியும் அது என்ன ஜெட்டா  பைட்? டிஜிடல் அலகுக்கு மிக அதிகபட்ச எண்ணிக்கையைக் குறிக்க தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் வார்த்தைதான் ஜெட்டா பைட் (Zettaa Byte). டிஜிடல் உலகின் அதிகபட்ச்ச டிஜிடல் அலகாக இதுவரை இருந்த பெட்டா பைட்டை (peta byte) முந்திக்கொண்டு வந்துள்ளது இந்த ஜெட்டா பைட். ஒரு ஜெட்டா பைட் என்பது ஒரு மில்லியன் பெட்டா பைட் ஆகும். அல்லது 1,000,000,000,000,000,000,000 தனி பைட்டுகள் ஆகும்.

இதுவரை மனித இனத்தின் மொத்த டிஜிடல் வெளியீடு சுமார் எண்பது லட்சம் பெட்டா பைட்டுகளாக உள்ளது. (ஒரு பெட்டா பைட் என்பது ஒரு மில்லியன் கிகா பைட்டுகள்) ஆனால் இது இந்த வருடம் 1.2 ஜெட்டா  பைட்களைக் கடந்துவிடும் என்று கருதப்படுகிறது. புரியும் வகையில் சொல்லப்போனால், உலகின் தற்போதைய டிஜிட்டல் கொள்ளளவு என்பது, 75 பில்லியன் (ஒரு பில்லியன் = நூறு கோடி) ஆப்பிள் ஐ பேட்களில் சேமிக்க இயலுமான தகவல்களாகும். அல்லது ஒரு நூற்றாண்டு முழுவதும் உலகின் அனைவரும் மெசேஜ் பண்ணிக் கொண்டும் ட்விட்டரில் ட்விட்டிக்கொண்டும் இருந்தால் எத்தனை தகவல் வெளியாகுமோ அத்தனை அளவென கொள்ளலாம்.

டிஜிட்டல் தகவல் உலகின் இந்த அதிவேகப் பெருக்கத்திற்கு சமூக வெப் சைட்டுகள், ஆன்லைன் வீடியோ, டிஜிட்டல் போட்டோக்ராபி மற்றும் மொபைல் போன்கள் ஆகியவையே காரணம் என்று உலகின் டிஜிடல் வெளியீட்டினை கவனிக்கும் IDC சொல்கிறது. உலகின் எழுபது சதவிகித தகவல்கள் தனிநபர்களால் உருவாக்கப்படுபவையே என்றும் யூ டியூப், பிளிக்கர் போன்ற நிறுவனங்கள் அவற்றை சேமிக்கின்றன என்றும் இந்த IDC தொழிநுட்ப நிறுவனம் தெரிவிக்கிறது.

90 கோடி கணிணிகளுக்கு ஆபத்து - மைக்ரோ சாஃப்ட் !

உலகம் முழுதுமுள்ள கணிணிகளில் இன்டர்நெட் எக்ப்ளோரர் எனும் உலாவியை பயன்படுத்தும் 90 கோடி கணிணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்டர்நெட் எக்ப்ளோரர் உலாவியை பயன்படுத்துவோரின் கணிணியிலிருந்து அவர்களது ரகசிய விவரங்களும், சுய விவரங்களும் திருடப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. புதிதாக பரவி வரும் வைரஸால் வின்டோஸ் XP (SP3), வின்டோஸ் விஸ்டா, வின்டோஸ் 7, வின்டோஸ் சர்வர் 2003 மற்றும் வின்டோஸ் சர்வர் 2008 (R2) ஆகிய வின்டோஸ் இயங்குதளங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இருந்த போதிலும் நெருப்பு நரி (ஃபையர் ஃபாக்ஸ்), கூகுள் க்ரோம் மற்றும் சஃபாரி போன்ற உலாவிகளை பயன்படுத்தி வரும் பயனாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வின்டோஸ் இயங்குதளத்திற்குள்ளேயே இந்த வைரஸ் பரவுவதாகவும், இதனைத் தடுக்க எடுத்து வரும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை என்றும் மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.