வணக்கம்

எனது வலைப்பதிவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். எனது வலைப்பதிவு பற்றிய தங்களின் கருத்துக்களை vsathishkumarmca(at)gmail(dot)com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
நன்றி

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

சர்வதேச நிதியங்களிலிருந்து கடன் பெறுவதில் இந்தியா முதலிடம்

உலக வங்கி உட்பட, சர்வதேச நிதியங்களிலிருந்து கடன் பெறுவதில், இந்தியா முதலிடம் வகிப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. வளரும் மற்றும் ஏழை நாடுகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வறுமையை ஒழிப்பதற்கும் உலக வங்கி உட்பட, சர்வதேச நிதியங்கள் வட்டியில்லாமல் கடன் வழங்குகின்றன.இந்த கடனுதவிகள் முறைப்படி செலவிடப்படுகிறதா என்பதையும் அந்த அமைப்புகள் கண்காணிக்கின்றன. இதில் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் நாடுகளுக்கு கடனுதவி அதிகரித்து வழங்கப்படுகிறது. இந்த வகையில் ஏற்கனவே வழங்கப்பட்ட கடன் உதவியை சிறப்பாக கையாண்டதற்காக, இந்தியாவுக்கு சர்வதேச நிதியங்கள் தாராளமாக கடன் வழங்கியுள்ளன.

இதனால், 2009-10ம் நிதியாண்டில் உலக வங்கி உட்பட, சர்வதேச நிதியங்களிடமிருந்து, 33 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியை பெற்று கடன்பெறும் ஏழை நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இதற்கடுத்து மெக்சிகோ 31 ஆயிரம் கோடி கடனுதவியை பெற்று இரண்டாம் இடம் வகிக்கிறது.தென்னாப்ரிக்கா (18,620 கோடி), பிரேசில் (18,130 கோடி), துருக்கி (14,700 கோடி) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதில், சர்வதேச மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (ஐ.பி.ஆர்.டி.,) வாயிலாக 16 ஆயிரத்து 660 கோடியும், சர்வதேச வளர்ச்சி கூட்டமைப்பு (ஐ.டி.ஏ.,) மூலம் 6,370 கோடியும், உலக வங்கியிடமிருந்து (மொத்தம் 23,030 கோடி) இந்தியா கடனாக பெற்றுள்ளது.இதுதவிர வறுமை ஒழிப்பு திட்டங்களுக்காக அமெரிக்காவின் சர்வதேச விவசாய வளர்ச்சி நிதியம்(ஐ.எப்.ஏ.டி.,), பிரிட்டன் சர்வதேச வளர்ச்சித் துறை(டி.எப்.ஐ.,), ஜெர்மனி அரசு வங்கி மற்றும் ஜப்பான் வளர்ச்சி நிதியம் (ஓ.டி.ஏ.,) ஆகியவற்றிடமிருந்தும் அதிகளவு நிதி உதவி பெறப்பட்டுள்ளது.

அன்னை தெரசா பற்றி சில தகவல்கள்

பெயர் : அன்னை தெரசா.
பிறந்தது : யூகோஸ்லோவியாவில் உள்ள ஸ்கோப்ஜி நகரம்.
பிறந்த தேதி : 26-08-1910.
இறந்த தேதி : 05-09-1997.
இயற்பெயர் : ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ.
செல்லப்பெயர் : கோன்ஸா.
தந்தையின் பெயர் நிகோலா பொயாஜியூ.
தாயின் பெயர் திரானி பெர்னாய்.
உடன் பிறந்தவர்கள் : அக்கா அகா மற்றும் அண்ணன் லாஸர்.

மேலும் அன்னை தெரசா பற்றி அறிய இங்கே சுட்டவும்...

அன்னை தெரசாவின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி அவரது உருவம் பொறித்த நாணயம் 2010-ஆகஸ்ட்-28 அன்று வெளியிடப்பட்டது. அன்னை தெரசா கொல்கத்தாவில் தனது சேவைப் பணியை 5 ரூபாயுடன் தான் தொடங்கினார் என்று நாணயம் வெளியீட்டு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்னை தெரசாவின் சிறப்பான சேவைக்காக அவருக்கு 124 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் பாரத ரத்னா விருதும் அடங்கும்.

சிலம்பு மதுரைத்திட்டம் - ஒரு புதிய முயற்சி


"இன்று தமிழில் ஆயிரம், இலட்சமென இணைய தளங்கள் வந்துவிட்டன, செய்திகளுக்கும் பொழுது போக்குகளுக்கும் இருக்கும் இணைய தளங்கள் ஏராளம் ஏராளம், அவசர உலகில் விரைவு உணவுகள் தேடும் காலத்தில் பழஞ்சோற்றையும் தேடி சேர்க்கும் முயற்சி தான் இந்த சிலம்பு மதுரைத்திட்டம்" என்று தமிழர்களின் நிலையை சாடியிருக்கும் இந்த இணையதளத்தில் பல பழைய அருந்தமிழ் நூல்களை இலவசமாக தரவிறக்கம் செய்யலாம். புத்தகங்களைத் தரவிறக்குவதற்கான இணைப்பு "தமிழ் இணையங்கள்" பக்கத்தில் உள்ளது.
இணையப்பக்கத்தைப் பார்க்க இங்கே சுட்டவும்...

கூகுளின் தொலைபேசி சேவை

இணையதள கடவுளான கூகுள் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஜிமெயில், தொலைபேசி சேவையை துவக்கியுள்ளது. இதுதொடர்பாக, கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த சேவையை பெற விரும்புவோர், பின்வரும் வழிமு‌றையை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிமெயில் கணக்கைப்  புகுபதிகை  செய்து கொண்டு சாட் என்ற பிரிவில் சென்றால், அதில் ‘கால்’ என்ற பிரிவு இருக்கும் என்றும், அவ்வாறு இல்லையெனில், சாட் என்ற பிரிவிற்கு சென்று கால் என்பதை தேட வேண்டும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடா நாட்டிற்கு இலவசமாகவும், மற்ற நாடுகளுக்கு, குறைந்த கட்டணத்தில் பேசலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.