வணக்கம்

எனது வலைப்பதிவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். எனது வலைப்பதிவு பற்றிய தங்களின் கருத்துக்களை vsathishkumarmca(at)gmail(dot)com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
நன்றி

வியாழன், 20 ஜனவரி, 2011

ஜிமெயிலில் தவறுதலாக அனுப்பப்பட்ட மின்னஞ்சலை மீளப்பெறுவது எப்படி?

ஜிமெயிலில் தவறுதலாக அனுப்பிய ஒரு மின்னஞ்சலை உடனே நிறத்துவதற்கு ஒரு வசதியுண்டு. முதலில் ஜிமெயிலில் இந்த வசதியை இயக்குவதற்கு ஜிமெயிலில் உள்நுழைந்து, “Labs” பக்கத்திற்குச் சென்று,  “Undo Send” சேவையைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்தவும்.  (ஜிமெயில் பக்கத்தில், மேலே வலது மூலையில்,  பயனர் பெயர், “Setting” இடையில்,  பச்சை  நிற குடுவை  ஒன்று இருக்கும்.  அதுவே, “Labs” பக்கத்திற்குச் செல்லும் இணைப்பாகும்.) வழக்கமாக மின்னஞ்சலை அனுப்பிய பிறகு, Mail Send Successfully என்ற செய்தி வரும்.  நீங்கள் இந்த வசதியை இயக்கியிருந்தால், மின்னஞ்சல், அனுப்பிய பிறகு, “Your Message has been send, Undo” என்ற இணைப்பு வரும்.  மின்னஞ்சல் திரும்பப் பெறுவதாயின், இந்த இணைப்பைச் சொடுக்கினால் போதும்.