வணக்கம்

எனது வலைப்பதிவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். எனது வலைப்பதிவு பற்றிய தங்களின் கருத்துக்களை vsathishkumarmca(at)gmail(dot)com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
நன்றி

சனி, 30 ஜூன், 2012

விண்வெளியில் பறந்தபடி சாட்டிங்: கூகுளின் புதிய சாதனை


கூகுள் நிறுவனத்தின் Project Glass என்னும் திட்டத்தை பற்றி அவ்வப்போது சில தகவல்கள் வந்தாலும் அவை பிரபலமடையவில்லை. ஏனெனில் இத்திட்டத்தை குறித்து நம்புவதற்கும் பலர் மறுத்தனர். ஆனால் இன்று கூகுள் தனது Project Glass ஐக் கொண்டு வான்வெளியில் பறந்த படி(sky diving) வீடியோ அரட்டையில் (google + hangout) இல் ஈடுபட அதை நேரடியாக டெமோ காட்டியும் அசத்தியுள்ளது. இச்செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

கூகுளின் ஓன்லைன் LEGO Builders அறிமுகம்


LEGO எனப்படும் குற்றிகளைப் பயன்படுத்தி உருவங்களை ஒன்லைனில் உருவாக்கும் புதிய முறையினை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நவீன தொழில்நுட்பமானது கூகுள் குரோம் உலாவிகளில் மட்டுமே செயற்படக்கூடியதாகக் காணப்படுவதுடன், நவீன இணையத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு முப்பரிமாண சூழலில் விரும்பிய பொருட்களை உருவாக்கிக்கொள்ளவும் முடியும். இவ்வாறு உருவாக்கப்பட்ட வடிவத்தினை பின்னர் நமது வசதிக்கேற்ப தனித்தனிப்படங்களாக மாற்றி மின்னஞ்சலுக்கு அனுப்புவதன் மூலம் குறித்த உருவத்தினை நாம் தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.

Leap: கைவிரல்களால் கணணியை இயக்கும் புதிய தொழில்நுட்பம்




தொழில்நுட்பம் கணணி பயன்பாட்டில் கீபோர்ட் மற்றும் மவுஸை இல்லாமல் செய்து விடும் என கருதப்படுகின்றது. மேலும் மவுஸ் மற்றும் கீபோர்ட் கொண்டு கணணியை இயக்குவதை விட விரல்கள் மூலம் துல்லியமாக இயக்க முடியுமாம்.

சமூக வலைத்தளத்தை தொடங்கியது மைக்ரோசாப்ட்


உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், சமூக வலைத்தளம் ஒன்றை தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு, So.Cl என்ற முகவரியில் 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தனியார் பீட்டாக செயற்பட்டு வந்தது. இது தற்போது அனைவராலும் பயன்படுத்தக் கூடிய வகையில் மாற்றப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆய்வுகள், சமூக தேடல்கள் உள்ளிட்ட வசதிகளை பெருக்குவதற்காக இந்த வலைத்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு இயங்குதளங்​களை ஒருங்கே கொண்ட புதிய டேப்லட்கள்


அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டு பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்ற ஒரு சாதனம் தான் டேப்லெட் கணணிகள் ஆகும். இவை பொதுவாக விண்டோஸ், அப்பிளின் மக், அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படக்கூடியவையாகக் காணப்பட்ட போதிலும் தனித்தனியாகவே இந்த இயங்குதளங்கள் நிறுவிப் பாவிக்கப்பட்டன. ஆனால் தற்போது Asus நிறுவனம் இரட்டை இயங்குதளங்களைக் கொண்டதும் இரண்டு பூட் ஒப்சனைக் கொண்டதுமான புதிய டேப்லட்களை அறிமுகப்படுத்துகின்றது. இதில் இயங்குதளங்களாக விண்டோஸ், அன்ரோயிட் ஆகியவை நிறுவப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கணணி விளையாட்டி​ல் மேலும் ஒரு அற்புதமான தொழில்நுட்​பம் அறிமுகம்


பொழுதுபோக்கிற்காகவும், மூளை விருத்தியை அதிகரிக்கவும் அதிகளவானவர்களால் கணணி விளையாட்டுக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நாளுக்கு நாள் கணணி விளையாட்டானது புதிய தொழில்நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டு மெருகூட்டப்பட்டு வருகின்றது. இம்மாற்றங்களின் அடிப்படையில் தற்போது கணணி விளையாட்டுக்களைக் கட்டுப்படுத்துவதற்கென புளூடூத் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய தொடுதிரைக் கட்டுப்படுத்திகள்(touchscreen gaming controller) உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Ringbow என அழைக்கப்படும் இந் நவீன தொழில்நுட்பமானது அன்ரோயிட் சாதனங்கள் மற்றும் iOS சாதனங்கள் போன்றவற்றில் செயற்படக்கூடியதுடன் ஒருமுறை சார்ச் செய்து தொடர்ச்சியாக ஐந்து மணித்தியாலங்கள் வரை பயன்படுத்தக்கூடியது.