அமெரிக்காவில் இயங்கும் டிஜிடைம்ஸ் ரிசர்ச் நிறுவனம், அண்மையில் மேற்கொண்ட டிஜிட்டல் சாதனப் பயன்பாடு குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஆண்டு முதல் டேப்ளட் பிசிக்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்கும் என்று காட்டியுள்ளது. 2013 ஆம் ஆண்டில், 10 கோடி டேப்ளட் பிசிக்கள், மக்களுக்குத் தேவைப்படும் என அறிவித்துள்ளது. எதிர்காலம், மொபைல் இன்டர்நெட் இணைப்பில்தான் இயங்கும் என்று தெரிவித்துள்ள இந்த நிறுவனம், இதனால், ஸ்மார்ட் போன், டேப்ளட் பிசி மற்றும் நோட்புக் கம்ப்யூட்டர்கள் பரவலாக மக்களால் பயன்படுத்தப்படும் என்றும் கூறி உள்ளது. 2013ல் 80 கோடி ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்படும். இது இந்த ஆண்டைக் காட்டிலும் இரு மடங்கு கூடுதலாகும். இதனால், டேப்ளட் பிசிக்கள் பால் மக்கள் கவனம் திரும்பும். இருந்தாலும், ஸ்மார்ட் போன் அளவிற்கு டேப்ளட் பிசியின் பயன்பாடு அமைய சில காலம் ஆகும். 2013 வரை இதன் பயன்பாடு 12% முதல் 13% வரையில் மட்டுமே இருக்கும். அதன் பின்னரே, மிக அதிகமாக இது வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. இன்று வரை ஆப்பிள் நிறுவனத்தின் டேப்ளட் பிசியான, ஐ-பேட் தான் அதிகம் விற்பனையாகியுள்ளது. 42 லட்சம் ஐ-பேட் சாதனங்களை மக்கள் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இது ஆப்பிள் மட்டுமே, இந்தப் பிரிவில் சில காலம் இயங்கியதால் ஏற்பட்ட விற்பனை. தற்போது சாம்சங், எச்.பி. உட்பட பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் டேப்ளட் பிசி தயாரிப்பில் இறங்கியுள்ளன. இந்த வகையில் ஆர்.ஐ.எம். நிறுவனத்தின், பிளேபுக் டேப்ளட் பிசி, இச்சந்தையில் மிகப் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
சனி, 4 டிசம்பர், 2010
டேப்ளட் பிசி பயன்பாடு அதிகரிக்கும்
பிரிவு:
புதிய தொழில்நுட்பங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக