வணக்கம்

எனது வலைப்பதிவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். எனது வலைப்பதிவு பற்றிய தங்களின் கருத்துக்களை vsathishkumarmca(at)gmail(dot)com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
நன்றி

சனி, 24 ஏப்ரல், 2010

இயங்குதளம் (operating System) என்றால் என்ன?

    கணினியின் வன் மற்றும் மென்பொருள் வளங்களை நிர்வகிக்கக் கூடிய நிரல்களின் தொகுப்பை நாம் இயங்குதளம் (operating System) என்கிறோம். ஏற்கப்பட்ட கட்டளைகளுக்கிணங்க மின்னணு சாதனங்களை, சீராக இயக்கவல்லது இயங்கு தளம் ஆகும். நினைவகங்களை பகுத்தொதுக்கி கட்டுப்படுத்துவது, கொடுக்கப் படும் வன்பொருள் சார் கோரிக்கைகளுக்கு முன்னுரிமைக் கொடுத்து செயல்படுத்துவது, உள்ளீட்டு மற்றும் வெளியீட்டுக் கருவிகளை நிர்வகிப்பது, பிணையத்திற்கான வசதிகள், கோப்புகளின் நிர்வாகம் முதலியன இயங்குதளங்களின் அடிப்படை பணிகளாகும். பெரும்பான்மையான இயங்குதளங்கள் முனையத்தினை, முதன்மையான இடைமுகப்பாகக் கொண்டு இயங்குகின்றன. அதீத பயன்பாடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு, அவற்றுள் சில வரைகலை இடைமுகப்பினையும் வழங்குகின்றன. ஏனைய வன்மென் பொருட்களுக்கும், செயலிகளுக்கும் இயக்குதளம் அடிப்படையாக அமைகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக