வணக்கம்

எனது வலைப்பதிவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். எனது வலைப்பதிவு பற்றிய தங்களின் கருத்துக்களை vsathishkumarmca(at)gmail(dot)com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
நன்றி

புதன், 8 பிப்ரவரி, 2012

உயிரினங்கள் வாழ தகுதியுடைய கிரகம் கண்டுபிடிப்பு

விண்வெளியில் சூரிய குடும்பத்திற்கு வெளியே உயிரனங்கள் வாழ தகுதியுடைய பல்வேறு கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகின்றனர்.
ஏற்கனவே உயிரினங்கள் வாழ தகுதியுடைய மூன்று கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த வரிசையில் நான்காவதாக புதிய கிரகம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு ஜி.ஜே 667 சி என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த கிரகம் பூமியிலிருந்து 33 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. அங்கு நிலவும் தட்பவெப்பநிலை தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
இங்கு சூரியனைவிட மிக குறைந்த அளவே வெப்பம் நிலவுவதால் அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்த கிரகம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக