வணக்கம்

எனது வலைப்பதிவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். எனது வலைப்பதிவு பற்றிய தங்களின் கருத்துக்களை vsathishkumarmca(at)gmail(dot)com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
நன்றி

செவ்வாய், 31 ஜனவரி, 2012

குழந்தைகளுக்காவே ஓர் ஆன்ட்ராய்டு டேப்லெட்!

தற்போது டேப்லெட் சந்தை குழந்தைகளைக் குறி வைத்திருக்கிறது என்று சொல்லலாம். ஆம், இப்போது டேப்லெட் தயாரிக்கும் நிறுவனங்கள் குழந்தைகளைக் கவர்வதற்காக அவர்களுக்கென்றே பிரத்யோகமாக டேப்லெட்டுகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்த இருக்கின்றன.
அந்த விதத்தில் இப்போது குழந்தைகளுக்காக கூரியோ டேப்லெட் என்ற புதிய டேப்லெட் வருகிறது. இது குழந்தைகளைக் குறிவைத்து தயாரிக்கப்பட்டாலும் பெரியவர்களும் ரசிக்கும் படி இருக்கும்.
இந்த கூரியோ டேப்லெட்டின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால் இது ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்டிவிஜ் இயங்கு தளத்தைக் கொண்டிருக்கிறது. இதன் இன்டர்னல் சேமிப்பு 4ஜிபி ஆகும். அதுபோல் இதன் எக்ஸ்டர்னல் சேமிப்பை 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும். கேமராவைப் பொருத்தவரை இந்த டேப்லெட் 2 மெகா பிக்சல் முக்கிய கேமராவையும் 0.3 மெகா பிக்சல் முகப்புக் கேமராவையும் கொண்டுள்ளது. அடுத்ததாக இந்த டேப்லெட்டில் யுஎஸ்பி ஸ்லாட்டும் உண்டு.
இந்த கூரியோ டேப்லெட் 7 இன்ச், 8 இனச் மற்றும் 10 இன்ச் என 3 மாடல்களில் வருகிறது. இது ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளம் கொண்டிருப்பதால் இந்த டேப்லெட்டை இயக்குவதற்கு சூப்பராக இருக்கும். மேலும் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்களைப் பதிவிறக்கம் செய்யவும் முடியும்.
குறிப்பாக இந்த டேப்லெட் 4 முதல் 15 வயதில் இருக்கும் குழந்தைகளுக்காகவே தயாரிக்கப்படுகிறது. இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் பெற்றோருக்கென்று தனியாக ஒரு அப்ளிகேசனும் இருக்கின்றது. அதன் மூலம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தேவையில்லாத இணையதளங்களுக்குள் செல்லாமல் தடுக்க முடியும்.
மற்ற அம்சங்களைப் பார்த்தால் இந்த கூரியோ டேப்லெட் எச்டிஎம்ஐ கனக்டர் மற்றும் யுஎஸ்பி சாக்கெட் கொண்டிருப்பதால் இதில் தகவல் பரிமாற்றம் செய்வது மிக எளிதாக இருக்கும். யுஎஸ்பி சாக்கெட் மூலம் கேமரா மற்றும் ஜாய்ஸ்டிக்கை இணைக்க முடியும். அதுபோல் இதன் பேட்டரி 6 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த கூரியோ ட்ப்லெட் குழந்தைகளுக்காகவே தயாரிக்கப்படுவதால் குழந்தைகள் மற்றும் பெற்றோர் மத்தியில் இந்த டேப்லெட்டுக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்று நம்பப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக