வணக்கம்

எனது வலைப்பதிவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். எனது வலைப்பதிவு பற்றிய தங்களின் கருத்துக்களை vsathishkumarmca(at)gmail(dot)com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
நன்றி

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

ஜப்பானில் இறந்தவர்களை தேடும் முயற்சியில் ஈடுபடும் ரோபோ

ஜப்பானில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலையிலும் சிக்கி உயிரிழந்தோரை கடலில் தேடும் பணியில் 2 ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கடந்த 5 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட பணியில் இதுவரை எவரது சடலமும் கிடைக்கவில்லை என ஜப்பான் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கடலுக்கடியில் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த ரோபோக்களில் கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் சோனார் கருவியும் உள்ளது. இரண்டு ரோபோக்களில் ஒன்று ஜப்பானிலும், மற்றொன்று அமெரிக்காவிலும் தயாரிக்கப்பட்டதாகும். இப்பகுதியில் கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதால் தேடும் பணியில் ஈடுபடுவது சிரமம் என நீச்சல் வீரர்கள் தெரிவித்ததால் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டன. கடலில் மூழ்கிய காரைக் கண்டுபிடித்த ரோபோக்கள் அதில் உயிரிழந்தோர் எவரேனும் உள்ளனரா என்றும் தேடியது. ரோபோக்கள் எடுத்த படப்பதிவுகள் செய்தியாளர்களுக்கு காட்டப்பட்டன. கடலில் கலந்துள்ள கதிர்வீச்சின் அளவை அறிய மற்றொரு ரோபோ பயன்படுத்தப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக