வணக்கம்

எனது வலைப்பதிவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். எனது வலைப்பதிவு பற்றிய தங்களின் கருத்துக்களை vsathishkumarmca(at)gmail(dot)com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
நன்றி

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

சூரிய சக்தியில் இயங்கக்கூடிய "சோலார் விமானம்"

முழுக்க முழுக்க சூரிய ஒளியிலேயே இயங்கும் விமானம் சுவிட்சர்லாந்தில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. சூரிய ஒளியில் இயங்கும் வாகனங்கள், விளக்குகள், சூடேற்றிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. சூரிய விமானம் உருவாக்குவதற்கான ஆராய்ச்சி கடந்த 2003ம் ஆண்டில் இருந்தே நடந்து வருகிறது. சுவிட்சர்லாந்தின் லாசான் நகரை சேர்ந்த இகோல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் முழுக்க முழுக்க சூரிய சக்தியிலேயே இயங்கும் விமானத்தை உருவாக்கியுள்ளது. அதிக அளவு கனம் இருக்கக் கூடாது என்பதால் கார்பன் பைபர் பொருளால் விமானம் உருவாக்கப்பட்டது. ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய விமானத்தின் மொத்த எடை 1,600 கிலோ. சூரிய ஒளியில் இருந்து மின்சார சக்தி தயாரிப்பதற்காக 11,600 சூரிய மின்கலங்கள் பயன்படுத்தப்பட்டன. சூரிய ஒளியின் மூலம் லித்தியம் மின்கலங்கள் சார்ஜ் ஏற்றப்பட்டு அதன் மூலம் இன்ஜின் இயக்கப்பட்டது. 10 குதிரைத் திறனுள்ள 4 இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன. சுவிட்சர்லாந்தின் லாசான் நகருக்கு அருகில் உள்ள பேயர்ன் ராணுவ தளத்தில் இதன் சோதனை நடந்தது. 64 கி.மீ வேகத்தில் புறப்பட்ட விமானம் சராசரியாக 70 கி.மீ வேகத்தில் பறந்தது. சீராக பறந்த விமானம் 2 மணி நேர பயணத்துக்கு பிறகு பத்திரமாக தரையிறங்கியது. இதுபற்றி இகோல் தொழில்நுட்ப கல்வி நிறுவன விஞ்ஞானிகள் கூறுகையில்,"பற்றரிகளின் திறன், சோலார் விமானத்தின் திறனை அதிகரிக்க தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. உலகையே சுற்றி வரும் சோலார் விமானம் 2014ல் அறிமுகப்படுத்தப்படும்" என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக