வணக்கம்

எனது வலைப்பதிவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். எனது வலைப்பதிவு பற்றிய தங்களின் கருத்துக்களை vsathishkumarmca(at)gmail(dot)com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
நன்றி

சனி, 19 மார்ச், 2011

முதன் முறையாக புதன் கிரகத்திற்கு நாசா விண்கலம்

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தின் விண்கலம் சூரியனுக்கு அருகாமையில் உள்ள புதன் கிரக வளையத்திற்கு வந்தது.
இந்த கிரகத்தை சுற்றும் உலக நாடுகளின் முதல் விண்கலம் என்ற பெருமை நாசா விண்கலத்திற்கு கிடைத்துள்ளது. மெசஞ்சர் என்ற இந்த விண்கலம் அமெரிக்க உள்நாட்டு நேரப்படி இரவு 9 மணிக்கு புதன் கிரக வளையத்திற்கு வந்தது. மெசஞ்சர் விண்கலம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் தனது பயணத்தை துவக்கியது.
மெசஞ்சரின் சாதனை குறித்து நாசா கூறுகையில்,"சூரியக் குடும்பத்தில் உள்பகுதியில் உள்ள புதன் கிரகத்திற்கு தங்களது விண்கலம் நுழைந்துள்ளது. இது பொறியியல் மற்றும் அறிவியல் சாதனை நிகழ்வாகும்.
அடுத்த சில வாரங்களுக்கு கடுமையாக வெப்பம் கொண்ட புதன் கிரக சூழலை விண்கலம் எதிர்கொள்ளும் வகையில் ஆய்வாளர்கள் கவனம் செலுத்துவார்கள். மார்ச் 23 ம் திகதி விண்கல கருவிகள் சோதனை செய்யப்பட்டு முடுக்கி விடப்படுகிறது. ஏப்ரல் 4 ம் திகதியன்று மெசஞ்சர் விண்கலம் தனது பயணத்தின் அறிவியல் நிலையை துவக்கும்.
மெசஞ்சர் விண்கலம் சூரியனில் இருந்து 280 லட்சம் மைல் தொலைவிலும், பூமியல் இருந்து 960 லட்சம் மைல் தொலைவிலும் உள்ளது. இந்த விண்கலம் புதன் கிரகத்தை ஆய்வு செய்ய 7 அறிவியல் உபகரணங்களை கொண்டுள்ளது.
மெசஞ்சர் விண்கலம் 2004 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது பயணத்தை துவக்கி 490 கோடி மைல் தூரத்தை கடந்துள்ளது. பல்வேறு கடுமையான சூழல்களை எதிர் கொண்டு புதன் கிரக வளையத்திற்குள் இந்த விண்கலம் நுழைந்துள்ளது என நாசா அறிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக