மோட்டரோலா செல்போன் நிறுவனத்தின் முழுப் பங்கையும் ரூ.68,750 கோடிக்கு
கூகுள் நிறுவனம் கைப்பற்றியது. கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட
கூகுள் நிறுவனம், தற்போது உலக அளவில் மிகவும் பிரபலமான தேடுதல் தளமாக
விளங்குகிறது. இந்நிறுவனம் செல்போன் தயாரிப்பு நிறவனமான மோட்டரோலாவை வாங்க 9
மாதங்களுக்கு முன் திட்டமிட்டது.
இந்நிலையில், ரூ.68,750 கோடி கொடுத்து மோட்டரோலாவின் முழு பங்கையும் கூகுள் கைபற்றியுள்ளது. மேலும், மோட்டரோலாவின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) இருந்த சஞ்சய் ஷா பதவி விலக முடிவு எடுத்ததை தொடர்ந்து, அதன் புதிய தலைமை செயல் அதிகாரியாக டெனிஸ் யூட்சைட் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் தங்கள் நிறுவனத்துடன் இணைந்து சஞ்சய் ஷா பணிபுரிவார் என்று கூகுள் சிஇஓ லாரிபேஜ் தெரிவித்தார்.