புதுடெல்லி : நாட்டில் நடைபெறும் சட்டவிரோத மருந்து பரிசோதனையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனிதர்களுக்கு புதிய மருந்துகளை அறிமுகப்படுத்தும் முன் அதை பன்னாட்டு நிறுவனங்கள் சோதித்து பார்ப்பது வழக்கம். இது குறித்து உச்சநீதிமன்றத்தில் டாக்டர்கள் குழுவினர் ஒரு பொதுநலன் வழக்கு தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் உள்ள ஏழைகள், சிறுவர்கள், ஆதிவாசிகள், தலித்கள் என 3 ஆயிரத்து 300க்கும் அதிகமானோரிடம் சட்டவிரோதமாக மருந்து பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் அரசு டாக்டர்கள் 15 பேர், 10 தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த 40 டாக்டர்கள் ஈடுபட்டனர். மனநலம் பாதிக்கப்பட்ட 233 பேரிடமும், 1,833 குழந்தைகளிடமும் சோதனை நடந்துள்ளது. இதற்காக அரசு டாக்டர்களுக்கு மட்டும் ரூ.5.5 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் 3 ஆண்டுகளில் 1500 பேர் பலியாயினர். இதை தடுக்கும் வகையில்,புதிய விதிமுறைகளை பரிந்துரை செய்வதற்கு நிபுணர் குழுவை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.எம். லோதா, எச்.எல். கோகலே முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இத்தகவலை கேட்டு கவலையடைந்த நீதிபதிகள், ‘‘ இது குறித்து மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். விசாரணை ஜூலை 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’’ என்றனர்.