சமீபத்தில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தைப் பார்த்தேன். கதையின் மையக்கரு ஒவ்வொரு இந்தியனையும், தமிழனையும் சிந்திக்க வைக்கும் விதமாக அமைந்திருந்தது. படத்தின் இயக்குனருக்கும், அதில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் என் பாராட்டுக்கள். மேலும் படத்தின் மற்ற நிறை, குறைகளைப் பற்றி அலசாமல் நம்முடைய அறியாமையைப் பற்றி சிந்தித்தோமானால் நாம் எவ்வளவு பின்னோக்கி வளர்ந்துள்ளோம் என்பது புரியும்.
நாம் பாதுகாக்க வேண்டிய பல நல்ல நூல்களையும், பழக்கங்களையும், பழந்தமிழர்தம் மரபுகளையும் பாதுகாக்க தவறிவிட்டோம் என்ற வருத்தத்தோடு மீதமுள்ளவற்றையாவது பாதுகாக்க முயல்வோம்.
நாம் பாதுகாக்க வேண்டிய பல நல்ல நூல்களையும், பழக்கங்களையும், பழந்தமிழர்தம் மரபுகளையும் பாதுகாக்க தவறிவிட்டோம் என்ற வருத்தத்தோடு மீதமுள்ளவற்றையாவது பாதுகாக்க முயல்வோம்.