வணக்கம்

எனது வலைப்பதிவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். எனது வலைப்பதிவு பற்றிய தங்களின் கருத்துக்களை vsathishkumarmca(at)gmail(dot)com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
நன்றி

புதன், 6 மார்ச், 2013

விண்டோஸ் 7யை முழுமையாக தமிழில் பயன்படுத்த

கணனி உலகம் மற்றும் இணையத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், அதிகமான வாசகர்களை பெறவும் நிறைய வசதிகளை அறிமுகம் செய்வது வழக்கம்.
அதில் முக்கியமாக தங்கள் படைப்புகளை குறிப்பிட்ட மொழிகளில் தந்து அதிக பயனர்களை பெறுவது.
இதுவரை கூகுள், பேஸ்புக் மற்றும் பல மென்பொருட்கள் அறிமுகமான கொஞ்ச வருடங்களிலேயே இந்த விடயத்தில் அடித்து ஆட, இவர்களுக்கெல்லாம் முன்னோடியான மைக்ரோசாப்ட் கொஞ்சம் தாமதமாக இந்த விடயத்தை கையில் எடுத்து பல வசதிகளை அதன் பயனர்களுக்கு தந்துள்ளது.
அந்த வகையில் உங்கள் விண்டோஸ் 7 இயங்குதளம் கொண்ட கணனியை எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
முதலில் கீழே உள்ள இணைப்பில் சென்று தமிழுக்கான விண்டோஸ் 7 மொழி இடைமுகத் தொகுப்பை (Lanugage Interface Pack - LIP) தரவிறக்கம் செய்யுங்கள்.
32 பிட் அல்லது 64 பிட் ஏதேனும் ஒன்றை மட்டும். எது என்ற குழப்பத்தில் உள்ளவர்கள் 32 பிட்டை தரவிறக்கம் செய்யவும்.
உங்கள் கணனியில் தரவிறக்கம் ஆன பின்பு, அதை உங்கள் கணனியில் நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
Next என்பதை தெரிவு செய்து, பின் அடுத்து வரும் பகுதியில் I Accept the license terms என்பதை தெரிவு செய்து மீண்டும் ஒரு Next, அடுத்து மீண்டும் ஒரு Next, இப்போது தமிழ் மொழி உங்கள் கணனியில் இன்ஸ்டால் ஆகும்.
இன்ஸ்டால் ஆன பின் மீண்டும் Next என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் Display மொழியை தெரிவு செய்ய வேண்டும். அதில் தமிழ் என்பதை தெரிவு செய்து "Apply display language to welcome screen and system accounts" என்பதை கிளிக் செய்து "Change Display Lanugage" என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான் இப்போது உங்கள் கணனியை ஒரு முறை நீங்கள் Restart செய்ய வேண்டும்.
இனி உங்கள் கணனி தமிழில் இயங்க ஆரம்பிக்கும். அனைத்து வசதிகளும், செயல்களும் தமிழில் இல்லாவிட்டாலும் பொதுவான பல விடயங்கள் தமிழில் இருக்கும்.
இனி ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட கணனியில் அடிப்படை விடயங்களை செய்ய முடியும்.
மீண்டும் ஆங்கிலத்துக்கு மாற: ஸ்டார்ட் மெனு >> கட்டுப்பாட்டுப் பலகம் >> காட்சி மொழியை மாற்றவும் என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் கட்டுப்பாட்டுப் பலகம் >> வட்டாரம் மற்றும் மொழி என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் "விசைப்பலகைகளும் மொழிகளும்" என்கிற பகுதியில் காட்சி மொழி ஒன்றை தெரிவு செய்யவும் என்பதற்கு கீழே English என்பதை தெரிவு செய்யுங்கள்.
ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற (இன்ஸ்டால் செய்த பின்): Control Panel >> Change Display Language என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் Control Panel >> Region and Language என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் Keyboards and Language என்பதில் Choose a Display Language கீழே தமிழை தெரிவு செய்து கொள்ளலாம்.

புதன், 5 செப்டம்பர், 2012

நரேந்திர மோடியால் ஸ்தம்பித்த கூகுள் சர்வர்

நாட்டு மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு கூகுள் பிளஸ்சின் மூலம் குஜராத் முதல்வர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி பதிலளித்ததால், கூகுள் சர்வரே, சில நிமிடம் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களின் கேள்விக்ளுக்கு , குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூகுள் பிளசில் நேரடியாக பதிலளித்தார். இந்நிகழ்‌ச்சி, யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், இணையதள தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டு மக்களை சந்தித்த முதல் அரசியல் பிரமுகர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார். சர்வதேச அளவில், இப்ட்டியலில், அமெரிக்க அதிபர் ஓபாமா, ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்டிற்கு பிறகு நரேந்திர மோடியும் இணைந்துள்ளார்.

சனி, 30 ஜூன், 2012

விண்வெளியில் பறந்தபடி சாட்டிங்: கூகுளின் புதிய சாதனை


கூகுள் நிறுவனத்தின் Project Glass என்னும் திட்டத்தை பற்றி அவ்வப்போது சில தகவல்கள் வந்தாலும் அவை பிரபலமடையவில்லை. ஏனெனில் இத்திட்டத்தை குறித்து நம்புவதற்கும் பலர் மறுத்தனர். ஆனால் இன்று கூகுள் தனது Project Glass ஐக் கொண்டு வான்வெளியில் பறந்த படி(sky diving) வீடியோ அரட்டையில் (google + hangout) இல் ஈடுபட அதை நேரடியாக டெமோ காட்டியும் அசத்தியுள்ளது. இச்செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

கூகுளின் ஓன்லைன் LEGO Builders அறிமுகம்


LEGO எனப்படும் குற்றிகளைப் பயன்படுத்தி உருவங்களை ஒன்லைனில் உருவாக்கும் புதிய முறையினை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நவீன தொழில்நுட்பமானது கூகுள் குரோம் உலாவிகளில் மட்டுமே செயற்படக்கூடியதாகக் காணப்படுவதுடன், நவீன இணையத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு முப்பரிமாண சூழலில் விரும்பிய பொருட்களை உருவாக்கிக்கொள்ளவும் முடியும். இவ்வாறு உருவாக்கப்பட்ட வடிவத்தினை பின்னர் நமது வசதிக்கேற்ப தனித்தனிப்படங்களாக மாற்றி மின்னஞ்சலுக்கு அனுப்புவதன் மூலம் குறித்த உருவத்தினை நாம் தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.

Leap: கைவிரல்களால் கணணியை இயக்கும் புதிய தொழில்நுட்பம்




தொழில்நுட்பம் கணணி பயன்பாட்டில் கீபோர்ட் மற்றும் மவுஸை இல்லாமல் செய்து விடும் என கருதப்படுகின்றது. மேலும் மவுஸ் மற்றும் கீபோர்ட் கொண்டு கணணியை இயக்குவதை விட விரல்கள் மூலம் துல்லியமாக இயக்க முடியுமாம்.

சமூக வலைத்தளத்தை தொடங்கியது மைக்ரோசாப்ட்


உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், சமூக வலைத்தளம் ஒன்றை தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு, So.Cl என்ற முகவரியில் 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தனியார் பீட்டாக செயற்பட்டு வந்தது. இது தற்போது அனைவராலும் பயன்படுத்தக் கூடிய வகையில் மாற்றப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆய்வுகள், சமூக தேடல்கள் உள்ளிட்ட வசதிகளை பெருக்குவதற்காக இந்த வலைத்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு இயங்குதளங்​களை ஒருங்கே கொண்ட புதிய டேப்லட்கள்


அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டு பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்ற ஒரு சாதனம் தான் டேப்லெட் கணணிகள் ஆகும். இவை பொதுவாக விண்டோஸ், அப்பிளின் மக், அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படக்கூடியவையாகக் காணப்பட்ட போதிலும் தனித்தனியாகவே இந்த இயங்குதளங்கள் நிறுவிப் பாவிக்கப்பட்டன. ஆனால் தற்போது Asus நிறுவனம் இரட்டை இயங்குதளங்களைக் கொண்டதும் இரண்டு பூட் ஒப்சனைக் கொண்டதுமான புதிய டேப்லட்களை அறிமுகப்படுத்துகின்றது. இதில் இயங்குதளங்களாக விண்டோஸ், அன்ரோயிட் ஆகியவை நிறுவப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.